வாருங்கள் சமைக்கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாருங்கள் சமைக்கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 27, 2011

ரம்ஜான்மட்டன்பிரியாணி

பிரியாணி
தேவையானப் பொருட்கள்:

மட்டன் - 1 கிலோ

அரிசி - 1 கிலோ

எண்ணை - 100 கிராம்

டால்டா - 150 கிராம்

பட்டை - இரண்டு அங்குல துண்டு

இரண்டு கிராம்பு -

ஐந்துஏலக்காய் -

முன்று வெங்காயம் -

1/2 கிலோ தக்காளி -

இஞ்சி - 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்

பூண்டு - 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்

கொ. மல்லி - ஒரு கட்டு

புதினா - 1/2 கட்டு

ப. மிள்காய் - 8

தயிர் - 225 கிராம்

சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்

மஞ்சள் போடி - 1 பின்ச்

ரெட்கலர் பொடி - 1 பின்ச்

எலுமிச்சை பழம் - 1

நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணையும்

டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும்

ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.

அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம்

போட்டு நன்றாக கிளறி மூடி போடவும்.

நல்ல பொன் முறுவல் ஆனதும்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.

ஓவ்வொரு தடவை கிளறும் போதும்

மூடி போட்டு மூடியே தான் வைக்க வேன்டும்.

அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

பிறகு கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்

அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும்.

இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு

தேவையான் அளவு போட்டு வேகவிடவும்.

நல்ல எண்ணையில் எல்லா பொருட்களும்

வதங்கியவுடன்.மட்டனை போடவும்.
போட்டு தீயை அதிகபடுத்தின்றாக முன்று நிமிடம் கிளறவும்.
பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும்.

அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.

வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.

தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும்

ஊறவைத்த அரிசியை வடிக்கவும்

.உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும்,

எலுமிச்சை பழமும் பிழியவும்.

வெந்ததும் முக்கால் பதத்தில் வடித்தல் போதும்.

உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும்

கிரேவியில் கொட்டவும்.

கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே

தம் போடும் கண் தட்டு

(அல்லது) டின் மூடி வைத்து

அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு

மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்

ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு

ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி
இரன்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து துவிவிடவும்.
அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும்
15 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு
மேலிருந்து கீழாக நல்ல உடையாமல்
பதமாக கிளறி சூடாக பறிமாறவும்

திங்கள், மே 23, 2011

முட்டை -சமையல்

முட்டை- சைவமா? அசைவமா?

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்துதா?

Always  it is a hundred million dollar question

எதிலிருந்து எதுவந்திருந்தாலும் இரண்டுமே SUPER TASTE.

அதுவும் முட்டையில் செய்யப்படும் RECIPIES  YUMMY.

சீக்கிரமும் செய்யக்கூடிய சுலபமான, சுவையான RECIPIES  நிறைய உண்டு.

முட்டை சமையலுக்கு முன்னால்   சில சுவாரஸ்யமான விசியங்கள்.

முட்டையைப் பற்றி நான் இணைய தளங்களில் படித்ததை -

உங்களுக்காக கொடுத்துள்ளேன்.

உடலுக்குத் தேவையான அனைத்து வகையான

வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) .

, தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின்,

பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு

தேவைப்படும் பாஸ்பரஸ்

காயங்களைக் குணமாக்கவும்,

நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் துத்தநாகம் என்னும்

தாதும் இதில் உள்ளது.

 மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது

முட்டையின் விலையும் குறைவு.

புரதம் மற்றும் விட்டமின் நிறைந்த உணவு முட்டை.

எனவே உடல் ஆரோக்கியத்திற்கும், பார்வை திறனுக்கும்,

இரத்த சிவப்பணு உற்பத்திக்கும் மிகவும் உகந்தது.

'தினம் ஒரு முட்டை'' உண்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்

வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி

முடிவு ஒன்று சொல்கிறது.

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது.

மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம்

இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை.

இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது.

20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது.

சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும்.

சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும்.

உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.


உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள்

முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது.


ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே

 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.


குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன்

வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை கொடுக்கலாம்.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற

நோய்கள் வராமல் தடுக்கிறது.

அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை.

மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை.


மசாலா முட்டை-



தேவையான பொருட்கள்-



முட்டை --------------------------- 5

பொடியாக நறுக்கிய வெங்காயம்------------------- 1

பொடியாக நறுக்கிய சுமாரான சைஸ் தக்காளி ------------ 2

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ----------------- 2

பட்டை------------------------------------------------------------ 1/4'

கிராம்பு --------------------------------------------------------- 2

ஏலக்காய் ---------------------------------------------- 1

சோம்பு --------------------------------------------------- 1/2 ts

இஞ்சி பூண்டு விழுது ----------------------------- 1 ts

தனியா தூள்-------------------------------------- 1 ts

தனி மிளகாய்த் தூள்------------------ 1/2 ts

மஞ்சள் தூள்------------------------------ 1/4 ts

மிளகுத் தூள் ------------------------------ 1/2 ts

எண்ணை --------------------------------------- 3 ts

உப்பு -------------------------------------------- தேவையான அளவு

 நறுக்கிய கொத்து மல்லி   இலைகள் --------------------- கொஞ்சம்



செய்முறை-




முட்டைகளை வேக வைத்து இர்ண்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி , சூடானதும் சோம்பு போடவும்.

அதன் பின்  பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்க்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

பச்சை மிளகாய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கி கூழ்ப் போல்  ஆனதும் மஞ்சள் தூள்,

தனியாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

தேவையானால் சிறிது அளவு தண்ணீர் சேர்க்கலாம்.

குறைந்த தணலில் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

கடைசியாக மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

முட்டைதுண்டுகளை சேர்த்து கவனமாக மசாலாவை

 நன்கு கலக்குமாறு பிரட்டவும்.

மஞ்சள் கருவும், வெள்ளைக் கருவும் தனித்தனியாக

பிரியாமல் பார்த்துச் செய்யவும்.

இது கொஞ்சம்  கெட்டியான மசாலா அயிட்டம்.

அந்த பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

கொத்துமல்லி மேலே தூவவும்.

இது எல்லாவற்றிற்கும் பொருத்தமான side dish.



முட்டை தொக்கு 



தேவையான பொருட்கள்



முட்டை - 5

பெரியவெங்காயம் - 6

தக்காளி {பெரியது எனின் } - 3

இஞ்சி - 1 துண்டு

பூண்டு  - 4 பல்லு

மிளகாயப்பொடி - தேவையான அளவு

எண்ணை - தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு



செய்முறை-



வெங்காயத்தை நீள வாக்கில் சீவி பொன்னிறமாக வதக்கவும்

.வதங்கி வரும்போது தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி

அதனுடன் சேர்த்து வதக்கவும் .

தக்காளி வதங்கியதும் இஞ்சி, பூண்டு இரண்டையும்

நன்றாக இடித்து இதனுடன் சேர்த்துவதக்கவும்

.பின் மிளகாயப்பொடி உப்பு போட்டு கிளறவும் .

இதனுடன் ஒரு தம்ளர்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .

நன்றாக கொதித்து வரும்போது அவித்த முட்டையை நாலாக கீறி

{துண்டாகாதபடி } இதனுடன் சேர்த்து கிளறி மூடிவிடவும் .

அடிக்கடி மெதுவாக கிளறி விடவேண்டும்

.தண்ணீர் வற்றியதும இறக்கி பரிமாறுங்கள் .



முட்டை குருமா



தேவையான பொருட்கள் :



முட்டை 6

வெங்காயம் 6

பால் 1/4 கோப்பை

முந்திரி 2 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய் 8

தேங்காய் துறுவல் 1 மேஜைக்கரண்டி

தனியா தூள் 3 மேஜைக்கரண்டி

லவங்கம் 6

பட்டை 1

ஏலக்காய் 2

இஞ்சி 1 துண்டு

மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

நெய் 3 மேஜைக்கரண்டி

உப்பு தேவையான அளவு




செய்முறை :



.பச்சை மிளகாய், தேங்காய், தனியா தூள், ஏலக்காய், பட்டை, லவங்கம்,

இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்தெடுத்து

 நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அத்துடன் மஞ்சள் கரு, பால் மற்றும் உப்பு சேர்க்கவும்.

.இந்தக் கலவையை மேலும் 10 நிமிடத்திற்கு நன்றாக அடித்துக்கொள்ளவும்

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கலவை இருக்கும்

பாத்திரத்தை வைத்து கொதிக்கவிடவும்.

 முட்டை நன்றாக வெந்தவுடன் அதை சதுங்களாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி நெய் சேர்க்கவும்,

சூடான பிறகு நறுக்கிய முந்திரியை பொன்நிறமாக வறுக்கவும்.

.இத்துடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து

 நெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.

 அரை கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

வெட்டி வைத்த முட்டை துண்டுகளை அதில் சேர்த்து

குருமா தேவையான அளவு கெட்டியாகும் வரை சமைக்கவும்.

கொத்துமல்லி தழைகள் தூவி அலங்கரித்து சூடாக பறிமாறவும்.




அரிசிமாவு   முட்டை அடை



தேவையானப் பொருட்கள்:

1/2 கிலோ பச்சரிசி

1 தேங்காய்

2 முட்டை

3 ஸ்பூன் மிளகு

1 கொத்து கொத்தமல்லி

1 சிட்டிகை மஞ்சள் தூள்

150 மில்லி எண்ணெய்

தேவையான அளவு உப்பு




செய்முறை:



அரிசியை கழுவி, உலர்த்தி எடுத்து, ரவை பதத்தில் அரைத்து

வை‌த்து‌க்கொள்ள வேண்டும்.

பிறகு அதை ஒரு வாணலியில்  லேசான தீயில் வைத்து

வறுத்துக் கொள்ளவேண்டும்.

தேங்காயை‌த் துருவி பால் பிழிந்துக் கொள்ள வேண்டும்.

மிளகை கொரகொரப்பாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

கொத்தமல்லியை பொடிசாக அரிந்து கொள்ள வேண்டும்.

மிளகுப் பொடி, கொத்தமல்லி இரண்டையும் மாவில் கொட்டி

அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

முட்டையை நன்றாக கலக்கி மாவில் ஊற்றி,கலக்கவும்.

தேங்காய் பாலையும் ஊற்றி நன்றாக கலந்து

2 மணி நேரம் ஊற விட வேண்டும்.

பிறகு ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடை ஊற்றுவது போல்

மாவை ஊற்றி 2 பக்கமும் பொன்முறுகலாக சுட்டு எடுக்க வேண்டும்.



எக் stew – சைனீஸ் ஸ்டைல்



தேவையான பொருட்கள்




முட்டை - 1

உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

ஸ்பிரிங் ஆனியன் - 2



சாஸ் செய்ய


கார்ன் ஃப்ளார் - 1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3 பல்

எண்ணெய் - 1/4 டீஸ்பூன்

வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 1

சீனி, உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

ஸ்பிரிங் ஆனியன் - 2



செய்முறை



ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கவும்.

முட்டையை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் உப்பு, மிளகுத்தூள்,

ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து ஆம்லெட் போட்டுக் கொள்ளவும்.

அந்த ஆம்லெட்டை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பூண்டு, கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்.

சாஸ் செய்ய ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி,

பூண்டு, உடைத்த சிவப்பு மிளகாய், ஸ்பிரிங் ஆனியன்,

 கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

சாஸ்களை, மிளகாய் பொடி, மிளகுத்தூள், சீனி, உப்பு போட்டு

 நன்கு கொதிக்க விட வேண்டும்.

பிறகு அடுப்பைக் குறைத்து கார்ன் ஃப்ளாரை சிறிது நீரில் கட்டிகள்

இல்லாமல் கரைத்து ஊற்றி தொடர்ந்து கிளறவும்.

கிரேவி கெட்டியானதும் ஆம்லெட் துண்டுகளை போட்டு கொத்தமல்லி,

ஸ்பிரிங் ஆனியன் தூவி நூடுல்ஸீடன் பரிமாறவும்.





எக்  டொமேட்டோ கிரேவி






தேவையான பொருட்கள்



முட்டை - 6

தக்காளி - 3

பெரிய வெங்காயம் - 1

புதினா இலை - 1/2 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 4

மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்

தனிமிளகாய் பொடி - 2 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1 கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க - சோம்பு, மிளகு



செய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

முட்டையை வேக வைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து

அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, சோம்பு, மிளகு போட்டு தாளித்து

பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்

 போட்டு வதக்கவும்.

 மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு வதக்கி

பின் அரைத்து வைத்துள்ள தக்காளி ஜீஸை ஊற்றவும்.

தக்காளி ஜீஸ் நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன்

உப்பு, புதினா இலைகளை சேர்க்கவும்.

  தேங்காய்ப்   பால் ஊற்றி கொதிக்க விடவும்.

கடைசியாக நறுக்கி வைத்துள்ள முட்டைகளை போட்டு

மஞ்சள் கரு வெளியே வந்து விடாமல் மூன்று நிமி கொதிக்க விடவும்.


 

முட்டை குழம்பு



தேவையான பொருட்கள்:


முட்டை 4,

வெங்காயம் 1

மிளகாய் தூள் 1/2 ,ts

 மஞ்சள் தூள் 1/2 ,ts


, தக்காளி 1,

உப்பு, -தேவையான அளவு

கடுகு- 1/4 ts

சீரகம்.-1/2 ts


எண்ணெயில் வறுத்து அரைக்க:
 
மல்லி 2 ts
 
மிளகாய் வற்றல் 3,
 
 பூண்டு 2 பல்,

இஞ்சி 1/2 இன்ச்,

மிளகு 1 ts
,
 சீரகம் 1 ts,

 தேங்காய் துருவல் 4 ts,

 அரிசி 1/2 ts,

கறிவேப்பிலை சிறிது.



செய்முறை:

முட்டைகளை வேக வைத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை

1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும்.

ஆற வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து,

வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

 வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள்,

மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து

 நன்றாக கொதிக்க விட வேண்டும்.

கெட்டியானதும் இறக்கவும்.

மல்லித்தழை போடவும்.


நன்றி- சில இணய தளங்கள்





















வெள்ளி, மே 20, 2011

பூண்டு -- சமையல்

பூண்டு குழம்பு

தேவையான பொருள்கள்:

பூண்டு - மூன்று முழுதாக
கடுகு - கொஞ்சம்
சிறிய வெங்காயம் - இரண்டு கப்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு

செய்முறை:

எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம்,
வெங்காயம்,பூண்டு முழுதாக சேர்த்து  வதக்கி
 பின் பொடியாக நறுக்கிய   தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து உப்பு, கொத்தமல்லி,
கறிவேப்பிலை அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும்

பிறகு   கெட்டியான   புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பாக அரை டீஸ்பூன் மிளகு தூள் போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


தேவையான பொருட்கள் :
புளி- ஒரு எலுமிச்சை அளவு
பூண்டு -இரண்டு
சின்ன வெங்காயம்- 6
தக்காளி- ஒன்று
தனியா- இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய்- பத்து
மிளகு-அரைத்தேக்கரண்டி
சீரகம்-அரைத்தேக்கரண்டி
சோம்பு-அரைத்தேக்கரண்டி
வெந்தயம்- அரைத்தேக்கரண்டி
மஞ்சத்துள் -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பெருங்காயம்-அரைத்தேக்கரண்டி
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி


தனியா,மிளகாய்,மிளகு சீரகம், உரித்த பூண்டு ஆறு பற்கள் ஆகியவற் றை சிவக்க வறுத்து அரைத்து வைக்கவும்
புளியையும் தக்காளியையும் கரைத்து வைக்கவும்.
பூண்டு வெங்காயத்தை உரித்து
வெங்காயத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.  
கடாயில் எண் ணெயை காயவைத்து அதில் கடுகு, சோம்பு கறீவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
பின்பு வெங்காயத்தைப் போடவும்.
வெங்காயம் சிவந்ததும் அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும்.
பின்பு உரித்த பூண்டை போடவும்.
அதன் பிறகு புளிக்கரைசலை ஊற்றீ உப்பைப் போட்டு கொதிக்கவிடவும்
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி விடவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


தேவையான பொருட்கள்

பூண்டு - 2 முழு பூண்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 2 அரை நெல்லிக்காய் அளவு
உப்பு - 11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்சாம்பார்  மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு,
சீரகம்,
வெந்தயம்,
பெருங்காய பொடி,
கறிவேப்பிலை.

செய்முறை
பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 spoon எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்.
அதன் பிறகு பூண்டு,வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி,அதில் பாதியை எடுத்து அரைத்து கொள்ளவும்.
அதன் பிறகு புளி தண்ணிரை ஊற்றி கொதிக்க விடவும்.
 உப்பு ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் அனைத்தும் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
10 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து 3 spoon நல்லெண்ணெய் விட்டு நிறுத்தவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை



தேவையானப் பொருட்கள்:


தக்காளி – 3

புளி – நெல்லிக்காய் அளவு

பூண்டு பல் – 20 அல்லது 25

சாம்பார் வெங்காயம் – 10 அல்லது 15

சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, புளித்தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளவும்.

நான்கு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தக்காளியைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.
ஆறியபின், வெந்த தக்காளியை எடுத்து தோலை உரித்து கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன், சீரகம், வெந்தயம், பெருங்காயம் சேர்க்கவும்.
 வெந்தயம் லேசாக சிவந்தவுடன், பூண்டை சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.
அதில் புளித்தண்ணீர், தக்காளி விழுது, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி விடவும். குழம்பை மூடி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும், அடுப்பை தணித்து, சிறு தீயில் வைத்து, குழம்பு சற்று கெட்டியானதும், இறக்கி வைக்கவும்.


செட்டிநாட்டு பூண்டு குழம்பு


தேவையானவை : 1

பூண்டு - 12 பல்

சின்னவெங்காயம் - 20

தக்காளி - 1 பெரியது

கரிவேப்பிலை - கொஞ்சம்

புளி - 1 எலுமிச்சியளவு

மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூண்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூண்

மிளகாய்பொடி - 1 டீஸ்பூண்

உழுந்து - 1 டீஸ்பூண்

கடுகு - 1 டீஸ்பூண்

தேங்காய்பால் - 2 டேபில் ஸ்பூண்

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு


தேவையானவை 2

மல்லி - 2 டேபிள்ஸ்பூண்

ஜீரகம் - 1 டீஸ்பூண்

கசகசா(வெள்ளை) - 1 டீஸ்பூண்

மிளகு - 1/4 டீஸ்பூண்

காய்ந்தமிளகாய் - 3

இஞ்சி - 1 துண்டு

எண்ணெய் - 1 டீஸ்பூண்

அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூண் எண்ணெய் ஊற்றி
தேவையானவை 2 ல் உள்ளவற்றை தனி தனியாக வறுத்து
 அதை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து வைக்கவும்.

சின்ன வெங்காயம், பூண்டு(நீளவாக்கில்), தக்காளி நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூண் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .

பின்னர் பூண்டு போட்டு சிறிது வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,காயம் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்து வதக்கவும்
.தேங்காய் பால் சேர்த்து 1 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்து வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை


 பூண்டு - 15 பல்


 வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10

 தக்காளி - 2

 புளி தண்ணீர்

தேங்காய் பால் - 1 கப்

 கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

 எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

 கறிவேப்பிலை, கொத்தமல்லி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

 மல்லி தூள் - 1 தேக்கரண்டி

 உப்பு

வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும்.
 எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.

தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.


பூண்டுகுழம்பு -மற்றொரு முறை

வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 25 பல் (தோல் நீக்கி நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
புளித்தண்ணீர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 அல்லது 1 1/2டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிது
தேங்காய் - 1 டீஸ்பூன்
(நன்கு வறுத்து அரைக்கவும்)

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
 தக்காளியும் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும், புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்த விழுதை சேர்த்து, சிறிது நீர் சேர்த்து ,
 நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.

சாதம், உப்பு பருப்பு, பூண்டு குழம்போட நல்லா இருக்கும்.
செஞ்சு 2 நாள் கழிச்சு சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
கத்தரிக்காய் அல்லது கோவைக்காய் சேர்த்தும் செய்யலாம்.














திங்கள், மே 02, 2011

சில்லி சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்


எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ

மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)

சோளமாவு: 1 தே. கரண்டி

முட்டை : 1

பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)

இஞ்சி : ஒரு சிறு துண்டு

டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி

சோயா சாஸ் : 2 தே. கரண்டி

சில்லி சாஸ்: 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் : சிறிதளவு

உப்பு தேவையான அளவு

எண்ணை பொரிக்க,

தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி

அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி



செய்முறை


*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி

வைத்துக்கொள்ளவும்.*

ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து

இறைச்சியுடன் சேர்க்கவும்

உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ்

ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.*

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம்

கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.*

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.*

ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும்

பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து

கிளறவும்.*

 சிறிது நேரம் சென்றபின்

 2 தே.கரண்டி சோயா சாஸ்,

சில்லி சாஸ், 1 தே.கரண்டி

4 தே. கரண்டி டொமாடோ சாஸ்

போட்டு கிளறிவிடவும்
.
சில்லி சிக்கன்  குழம்பு    தயார்.

பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க
.
குறிப்பு

விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய்

போட்டுக்கொள்ளலாம்.

இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்..

உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை

அலாதியாக இருக்கும்[.விருப்பம் ]

மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால்

 பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து

வதக்கிக்கொள்ளவும்
.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.

புதன், ஏப்ரல் 20, 2011

ரசங்கள்

 வித விதமான ரசங்கள் இருக்குது.
 
ஒவ்வொன்றும் ஒரு சுவை.
 
அந்த வரிசையில் இன்று ஒரு புது வகை ரசம்-
 
 
தேங்காய்ப் பால் ரசம்-
 
தேவையான பொருட்கள்-
 
தேங்காய் ------------ 1
சிறிய பழுத்த தக்காளி ---- 4
சின்ன வெங்காயம் ------ 5 --6
பூண்டு ------------- 4 --5
மிளகு ----------- 1  ts
சீரகம் ----------- 1  ts
எண்ணை அல் நெய் ----3  ts 
உப்பு ---------- தேவையான அளவு
மல்லித் தழை ----கொஞ்சம்
 
செய்முறை-
 
தேங்காய்த் துருவி சிறிது அரைத்து , பிழிந்து முதல் பால் எடுத்து தனியே வைக்கவும்.
இரெண்டாவது , மூன்றாவது பால் எடுத்து கலந்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், பூண்டு -பொடிக்கவும். [ பிரெஷ் ஆக பொடித்து செய்தால் மணமாக இருக்கும்]
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை அல் நெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கவும்.
பின் பொடித்து வைத்ததை போட்டு வதக்கவும்.
இதனுடன் இரெண்டாவது, மூன்றாவது பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
உப்பு சேர்க்கவும்.
கொதித்ததும் இறக்கி வைத்து முதல் பாலை கலக்கவும்.
மேலே கொத்துமல்லி தலை தூவவும்.
 
கவனிக்க வேண்டியது -
தேங்காய் பால் கொதிக்கும் போது தீ தணிவாக இருக்க வேண்டும்.
அதிக நேரம் கொதிக்க கூடாது.
கொதி வந்து   அடுப்பில்       2 -3  நி இருந்தால் போதும்.

புதன், ஜனவரி 12, 2011

சுவையான குழம்பு

தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம் - கால் கிலோ,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள், -2 டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்.
இஞ்சி பூண்டு விழுது-- 2 டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
கசகசா, --ஒரு டேபிள்ஸ்பூன்,
சோம்பு ----ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் - ஒரு கப்,
மிளகாய் வற்றல் - 2.
இவை அனைத்தையும் எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும்..
அல்லது பொடிக்கவும்.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, சாம்பார் வெங்காயத்தை வதக்கவும்.
வதக்கிய பின் பொடி அல்லது அரைத்த மசாலா போட்டு வதக்கவும்.
பிறகு, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.
இப்போது புளியைக் கரைத்து விடவும்.
ஒரு கொதி வந்ததும்,மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்.
உப்புப் போடவும்.
நன்றாகக் கொதி வரட்டும்.
எண்ணை மேலே வருமளவு அடுப்பில் இருக்கட்டும்.
குழம்பு சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.
சிறிதளவு சாம்பார் வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி,
எண்ணெயில் சிவக்க வறுத்து அதில் தூவவும்.

ஞாயிறு, ஜனவரி 09, 2011

வத்தக் குழம்பு

தினமும் பருப்பு போட்டே செய்வது சலிப்பு என்றால், சாப்பிடுவது மகாபோர்.
கொஞ்சம் காரசாரமாய் ,செய்வதற்கு சுலபமாய், சாப்பிட ருசியாக இருப்பதில் best choice வத்தக்குழம்பு alais வற்றல் குழம்பு.

பாரம்பரிய குழம்பு-------
தேவையான பொருட்கள்-
சுண்ட வற்றல் or மணத்தக்காளி வற்றல் --------- 2ts
கடுகு-------------------------- கொஞ்சம்
பெருங்காயப் பவுடர் -------- 1/4 ts
கடலைப் பருப்பு -------------- 1/2 ts
உளுத்தம் பருப்பு -------------- 1/2 ts
வெந்தயம் --------------------- 1/4 ts
மிளகாய் வத்தல் ------------- 4
சாம்பார் மிளகாய்ப் பொடி -- - 3 ts
புளி ------------------------------ ஒரு எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை ----------------- கொஞ்சம்
நல்லெண்ணெய் -------------- 5 ts
செய்முறை ----------
புளியை கரைத்து வடிகட்டி ஒரு சிறிய கப் அளவு எடுக்கவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி , காய்ந்ததும் பெருங்காயப் பொடி போடவும். அது பொரிந்ததும்
கடுகு, அது வெடித்ததும்,
கடலைப் பருப்பு, உளுந்த பருப்பு போட்டு, சிவந்ததும்,
கறிவேப்பிலை , மிளகாய் வத்தல் போடவும்.
வெந்தயம் சேர்க்கவும். அளவு கொஞ்சமாக இருக்க வேண்டும். அதிகம் சிவக்கக் கூடாது. குழம்பு கசந்து விடும்.
வத்தல் சேர்த்து நன்கு வறுக்கவும்.
அதில் புளித் தண்ணீர் சேர்க்கவும்.
சாம்பார் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.
பொதுவாக வத்தல் குழம்பு அதிக அளவில் செய்ய முடியாது.
வேண்டும் என்றால், புளித் தண்ணீர் அதிகம் ஊற்றி , கொதித்ததும் 2 ts அரிசி மாவை கொஞ்சம் நீரில் கரைத்து ஊற்றி கெட்டி யானதும் இறக்கவும்.
இதற்கு சுட்ட அல்லது பொறித்த அப்பளம் அல்லது வடாம் நல்ல combination.
சுடு சாதத்தில் வத்தக் குழம்பு ஊற்றி, நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

மாடர்ன் வத்தல் குழம்பு--
தேவையான பொருட்கள் --

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் ----
தனியா ----------------------------- 4 ts
மிளகாய் வத்தல் ---------------- ௪

துருவிய தேங்காய் ------------ 8 ts
கசகசா --------------------------- 1 ts

நறுக்கிய பெரிய or சிறிய வெங்காயம் ------------ ஒன்று or 10
மேலே கொடுத்துள்ளவைகளை [ இடம் விட்டு இருப்பதை ]தனித் தனியே வறுக்கவும். ஒன்றாகவே அரைக்கலாம்.

தாளிக்கத் தேவையான பொருட்கள்-
பெருங்காயத் தூள் ---------- 1/2 ts
கடுகு ------------------------ 1/2 ts
கடலை பருப்பு -------------- 2 ts
உளுந்துப் பருப்பு ------------- 2 ts
கறிவேப்பிலை -------------- கொஞ்சம்
மிளகாய் வத்தல்---------- 6
சாம்பார் வெங்காயம் -------- கொஞ்சம் [ சிறியது என்றால் இரண்டாக நறுக்கவும்,சிறியதாக இருந்தால் முழுதாகப் போடவும் ]
சுண்ட or மணத்தக்காளி வத்தல்---------- 2 ts
நறுக்கிய தக்காளி -------------------------- 3
நல்லெண்ணெய் -------------------------- 8ts
பொதுவாகவே வத்தல் குழம்பிற்கு எண்ணை அதிகம் வேண்டும்.
எண்ணையில் மேலே சொன்ன வரிசைப்படி வதக்கவும்.
இதில் வதக்குவதுதான் main. நன்கு வதங்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து விட வேண்டும்.
இந்த நிலையில் அரைத்ததை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
ஒரு எலுமிச்சை அளவு புளியில் எடுத்த ஒரு கப் புளித் தண்ணீரை ஊற்றவும்.
இதனுடன்,
மஞ்சள் தூள் --------- 1/2 ts
வெறும் மிளகாய்த் தூள் ---- 1 or 2 ts
உப்பு ------------------------ தேவையான அளவு
இவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து எண்ணை பிரியும் வரை வைக்கவும்.
வற்றலுக்குப் பதில் முருங்கைக் காய் சேர்க்கலாம்.
குழம்பு திக்காக இருக்க வேண்டும்.
அருமையான வத்தல் குழம்பு தயார்.


வியாழன், ஜனவரி 06, 2011

சுலப சமையல்

பன் டோஸ்ட்-------
பன் -------------- 1
பெரிய வெங்காயம்------ 1[ பொடியாக நறுக்கியது]
தக்காளி-------------- 1/2 [ விருப்பம் , நறுக்கியது]
குடை மிளகாய்--------- பொடியாக நறுக்கியது கொஞ்சம்
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு----1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-------- 1 ts
கரம் மசாலாப் பொடி---------- 1/2 ts [ விருப்பம்]
மிளகாய் தூள்------------------ 1 ts
பொடியாக நறுக்கிய கொத்து மல்லி---------- கொஞ்சம்
எண்ணை--------------------------- தேவையான அளவு
உப்பு ----------------------------------- தேவையான அளவு
செய்முறை-------
பன்னின் நடுவில் ,ஒரு சிறிய கிண்ணமோ, கரண்டியோ பயன்படுத்தி வெட்டி எடுக்கவும். [ ஒரு scoop icecreamபோல்]
பன்னின் வெள்ளைப் பகுதியில் வழித்து எடுக்கவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணையில் வெங்காயம் வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடிகள் சேர்த்து வதக்கவும்.
மசித்த கிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும்.
உப்பு போடவும். மல்லித் தழை சேர்த்து கலக்கவும்.
வெட்டி எடுத்த பன் பகுதியையும் உதிர்த்து சிறிது அதனுடன் நன்கு கலந்து வைக்கவும்.
பன்னின் குழிவான பகுதியில் மசாலாவை வைக்கவும்.
வழித்து எடுத்த பன்னால் மூடவும்.
ஒரு தவாவில் எண்ணை, நெய், பட்டர் [ your choice] ஒரு ஸ்பூன் ஊற்றி பன்னை கவனமாக இரண்டு பக்கமும் வாட்டி எடுக்கவும்
ஒரு சுவையான snack ready .
டிப்ஸ்-
தக்காளியை இரண்டாக வெட்டி, பிழிந்து விட்டு பயன்படுத்தினால், சிறுநீரக கல் உருவாக காரணம் என்று சொல்லப்படும் விதைகள் போய்விடும்.
இதுபோல் dry வகைகள் செய்யும் போது மசாலா நீர் இன்றி இருக்கும்.
dry மசாலாக்களுக்கு உருளைக் கிழங்கை பயன்படுத்தும் போது, கிழங்கை தண்ணீரில் வேக வைக்க கூடாது. ஆவியில் வேக வைக்க வேண்டும். அதாவது இட்டிலி தட்டு அல்லது elctric rice cooker மேல் தட்டு அல்லது சாதாரண குக்கரில் அரிசி வேகவைக்கும் போது ஒரு மூடிய பாத்திரத்தில் வைக்கலாம். தண்ணீர் வேண்டாம். ஆறிய பின் தோலுரிக்கலாம்.
வேறு எந்த காய்களையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
கட்டாயம் கிழங்கு இருக்க வேண்டும்.

bread toast-
இதே மசாலா பயன்படுத்தலாம்.
தக்காளி வேண்டாம்.
பொடியாக நறுக்கிய mushroom சேர்க்கலாம்.
non stick தவாவில் கோடு மாதிரியான design உள்ளது வந்துள்ளது.
ஒரு சாண்ட்விட்ச் bread loafமேல் பக்கம் பட்டர் தடவவும்.
உள் பக்கம் இந்த மசாலாவை வைக்கவும்.
அதன் மேல் துருவிய cheese வைக்கவும்.
மேலே வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளிரி slices வைக்கவும்.
மற்றொரு breadloaf மேல் பட்டர் தடவி , stuff பண்ணிய loaf மேல் மூடவும்.
தாவாவை நன்கு சூடு பண்ணவும்.
அதில் ஒரு ஸ்பூன் பட்டர் ஊற்றி, bread வைக்கவும்.
அடுப்பை சிம் யில் வைக்கவும்.
நன்றாக அழுத்தி விடவும்.
திருப்பி போடவும்.
நன்கு அழுத்தி விடவும்.
தவாவின் கோடுகள் பதிய வேண்டும்.
சாஸ் உடன் சாப்பிடவும்.

வெள்ளி, டிசம்பர் 17, 2010

புஸ் புஸ் பூரி

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு.
வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.
செய்முறை:==
கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து ,உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.*
நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும்.* பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய்(ஒரு டேபிள்ஸ்பூன்) படுமாறு தடவவும்.*
ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும்.*
எண்ணையை கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.*
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.(மாவு சமமாக இருக்க வேண்டும்)*
எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.*
ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்.
இரு பக்கங்களும் சிவந்ததும் பேப்பர் டவலில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.
இந்த முறையில் செய்த பூரி சீக்கிரம் அமுங்காது.

மிளகு உளுந்து வடை

தேவையானப்பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம்---------பொடியாக நறுக்கியது 1/4 கப்
சீரகம் - ------------1 ts ---- 2 ts
மிளகு -------------- 1 ts-- 2 ts
இஞ்சி -------------- ஒரு சிறு துண்டு
உப்பு --------------- தேவைக்கு ஏற்ப
எண்ணை --------- பொறித்து எடுக்க
செய்முறை-
உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு மற்றும் இஞ்சியை சேர்த்து மைய அரைக்கவும்.
அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும்.
சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும்.
அதுதான் சரியான பதம்.
அரைத்த மாவில், பொடியான நறுக்கிய வெங்காயம், கொரகொரப்பாக பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான் சூட்டில் வைத்து, ஒரு எலுமிச்சம் பழ அள்வு மாவை எடுத்து, இலேசாக தட்டி, நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.
மேற்கண்ட அளவிற்கு சுமார் 12 வடைகள் கிடைக்கும்.

இட்லி- சாம்பார்

தேவையானப்பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/2 கப்
பயத்தம்பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் -------- 1/4 ts
சாம்பார்ப் பொடி - 2 ts- 3 ts
சின்ன வெங்காயம் - 10 முதல் 15 [முழுதாகவோ, பாதியாவோ போடலாம்]
பெரிய தக்காளி -------- 1
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லித்தழை - கொஞ்சம்
புளி---------------------- ஒரு நெல்லிக்காய் அளவு
புளியைக் கரைத்து அரை டம்ளர் புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.
எண்ணை ----------------- 1 tbs
கடுகு ---------------------- 1 ts
பெருங்காயத்தூள் -------- 1/4 ts

செய்முறை:
துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.புளியை ஊறவைத்து, கரைத்து 1/2 கப் வரும் அளவிற்கு, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.சாம்பார் வெங்காயத்தை, தோலுரித்து, நீளவாக்கில் ஒன்றிரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு அத்துடன் புளித்தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி கொதிக்க விடவும். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக்கொதித்தவுடன், வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, கீழே இறக்கி வைத்து கொத்துமல்லித் தழையைத்தூவவும்.
குறிப்பு: எண்ணையில் வறுத்து அரைத்த வீட்டில் தயாரித்த சாம்பார்ப் பொடியை உபயோகித்தால், சாம்பார் வாசனையாக இருக்கும்.
இதில், ஒரு உருளைக்கிழங்கு, ஒரு காரட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் வதக்கும் பொழுது அத்துடன் சேர்த்து வதக்கி சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம்.

செவ்வாய், டிசம்பர் 14, 2010

பாகற்காய் வறுவல்

தேவையான பொருட்கள்-
பாகற்காய் ----------------- 3
மஞ்சள் தூள் -------------- 1 ts
சாம்பார் மிளகாய்த் தூள் --- 4ts
கெட்டியான புளித்தண்ணீர் --- 3 tbs
பொடித்த உருண்டை வெல்லம் --- 3 tbs
உப்பு -------------------------------- தேவையான அளவு
எண்ணை --------------------------- 4 tbs
செய்முறை-
காயை கழுவி வட்ட வட்டமாக நறுக்கவும். விதைகளை நீக்கவும்.
மஞ்சத்தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்புடன் நீரில் வேகவைக்கவும்.
தண்ணீரை வடிகட்டவும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும், காய்த் துண்டுகளை போடவும்.
அதில் மூன்று ts மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
பின் அதில் புளித்தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
இப்போது பொடித்த வெல்லத் தூள் போட்டு பிரட்டவும்.
வேண்டுமானால் எண்ணை கொஞ்சம் ஊற்றி வதக்கவும்.
சிவக்க வறுக்கவேண்டும்.
கசப்பு தெரியாது.

தானியக் குழம்பு

தேவையான பொருட்கள்-
காய்ந்த சிவப்புக் கலர் காராமணி -----1/4 கப்
[தட்டப் பயறு]
காய்ந்த பட்டாணி------------------------1/4 கப்
வெள்ளை சுண்டல் கடலை -------------1/4 கப்
முளைவந்த பாசிப் பயறு -----------------1/4 கப்
இவற்றை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் அளவான தண்ணீரில் சிறிது உப்பிட்டு வேகவைக்கவும்.
தண்ணீர் இருந்தால் வடித்து வைக்கவும். பயன்படுத்தலாம்.
வறுத்து அரைக்க-
சீரகம்----------------------2 ts
கருவேப்பிலை ----------- கொஞ்சம்
காய்ந்த மிளகாய்---------6-7
துருவிய தேங்காய் -------- 1/4 கப்
தனியா தூள் ----------------2 ts
இரண்டு ts எண்ணையில் மேலே உள்ள வரிசைப்படி பொருட்களைப் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வணக்கவும்.
தேங்காய் நன்கு வறுபடணும். குறைந்த தணலில் வைத்து செய்யவும்.
ஆறியதும் இதனுடன், வேகவைத்த தானியங்கள் ஒவ்வொன்றும் ஒரு tbs அளவில் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
ஒரு கடாயில் 3 ts எண்ணை ஊற்றி கொஞ்சம் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சிறியதாக அரிந்த ஒரு தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
அதில் அரைத்ததைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த தானியங்களைப் போடவும். உப்பு போடவும்.
வேகவைத்த நீரோ, அல்லது தேவையான அளவு நீரோ சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு ஓரளவிற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
மேலே மல்லித் தளை போடவும்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல side dish .





வியாழன், நவம்பர் 25, 2010

சுலபமானவை

அவல் புலாவ்-
தேவையான பொருட்கள்-
அவல் ----------------------1 கப் [200 கிராம் ]
பெரிய வெங்காயம் ------1[பொடியாக நறுக்கியது]
பச்சை மிளகாய் -----------1 OR 2
பட்டை ---------------------1 சிறிய துண்டு
கிராம்பு---------------------1
ஏலக்காய்------------------1
இஞ்சி ----------------------1 சிறிய துண்டு
பூண்டு----------------------4 பல்
உப்பு ------------------------தேவையான அளவு
கேரட் ----------------------1/4 கப் [பொடியாக நறுக்கியது]
பீன்ஸ் ---------------------1/4 கப் [பொடியாக நறுக்கியது]
கருவேப்பிலை-----------கொஞ்சம்
கொத்துமல்லி------------கொஞ்சம்

செய்முறை-
கேரட், பீன்சை அளவானநீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக விடவும்.
அவலை நன்கு களைந்து அளவான நீரில் சரியாக 5 நி ஊற விட்டு வடி கட்டவும்.
இரண்டு ஸ்பூன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கொரகொரப்பாய் அரைக்கவும்.
இரண்டு ஸ்பூன் எண்ணையில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, கருவேப்பிலை தாளித்து அடுத்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் அரைத்ததைப் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த காய்கறிகளை போட்டு வதக்கி அதனுடன் அவலைப்
போட்டு நன்கு கலந்து உப்பிடவும். அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும்.
இறக்கி கொத்துமல்லி தூவவும்.
option- தக்காளி சேர்க்கலாம்.

அவல் உப்புமா-
தேவையான பொருட்கள்-
அவல்----------------------1 கப்
வெங்காயம்---------------1/4 கப் [பொடியாக நறுக்கியது]
பச்சை மிளகாய்------------4
இஞ்சி-----------------------கொஞ்சம் [பொடியாக நறுக்கியது ]
கடலைப் பருப்பு-----------1 ts
உளுந்துப் பருப்பு-----------1 ts
வறுத்த வேர்க்கடலை-----2 ts
கருவேப்பிலை-------------கொஞ்சம்
எண்ணை-------------------2tbs
உப்பு-----------------------தேவையான அளவு
செய்முறை-
அவலை நன்கு களைந்து ஐந்து நி நீரில் ஊற வைக்கவும். பின் வடிகட்டவும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி அதில் கடுகு, பருப்புகள் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி அதனுடன் கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
உப்பிட்டு வதக்கி அதனுடன் வேர்க்கடலை சேர்க்கவும்.
அவுலைப் போட்டு 2-3 நி சிம்மில் வதக்கவும்.
இறக்கி கொத்து மல்லி போடவும்.

option- இறக்கும் போது துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். அதுவும் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் சேர்க்க வேண்டும்.

திங்கள், நவம்பர் 22, 2010

சுலபமானவை

ஒரு கப் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

நீரை வடித்து விட்டு நான்கு அல்லது ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்.

இந்த மாவை , மோரில் நீர்க்க கரைக்கவும்.

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

சப்பாத்தி மாவு பதத்தில் வந்ததும் இறக்கவும்.

ஆறியதும் கையால் நன்கு பிசைந்து சீடைகளாக உருட்டவும்.

எண்ணையில் பொரிக்கவும்.

புளிப்பும், காரமுமான சுவையான சீடை ரெடி.





தயிரை துணியில் கட்டி தொங்க விட்டு நீரை நீக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லி அரைத்து ,உப்பிட்டு தயிருடன்கலக்கவும்.

டோஸ்ட் செய்த பிரெட் மீது தடவி சாப்பிடலாம்.

இதனுடன் cheese துருவியது அல்லது cheese slice வைத்தும் சாப்பிடலாம்.





ஒரு கப் ரவையை [வெள்ளை or கோதுமை] வறுக்கவும்.

ரைஸ் குக்கரில் 3ts எண்ணை ஊற்றி கொஞ்சம் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி , நான்கு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொஞ்சம் நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் காரட் துண்டுகள், கொஞ்சம் பச்சைப் பட்டாணி, கொஞ்சம் பீன்ஸ் துண்டுகள், கொஞ்சம் குடைமிளகாய் துண்டுகள், போட்டு வதக்கி ரவையைப் போட்டு இரண்டரை கப் நீர் விட்டு உப்பிட்டு வேக விடவும்.

வெந்ததும் 1ts நெய் or எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ,முந்திரி, வேர்க்கடலை தாளித்து போடவும்.

எண்ணை குறைவான சத்தான கிச்சடி ரெடி.

அடிக்கடி கிளற வேண்டாம்.

நேரம் மிச்சம்.

மெக்சிகன் ரைஸ்

பாசுமதி அரிசி ------------------- 2 கப்

பெரிய வெங்காயம்---------------1

வெங்காயத்தாள் ------------------கொஞ்சம்

மிளகாய் வற்றல் ----------------20

பூண்டு-----------------------------6 பல்
அஜினோமோட்டோ ------------1/4 ts

எண்ணை --------------------------1/4 கப்

செய்முறை-



12 மிளகாய் வற்றல், 8 பல் பூண்டு , மையாக அரைக்கவும்.

அரிசியை 10 நி ஊறவிட்டு இரண்டு முறை கழுவவும்.

நீரை வடிகட்டவும்.

4 கப் நீரில் இரண்டு விசில் விடவும். 10 நி சிம்மில் வைக்கவும்.

வெங்காயம், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கவும்.

2 ஸ்பூன் எண்ணையில் மிளகாய், பூண்டு விழுதை பச்சை வாசனை போக வதக்கவும்.

இதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் சாதம், அஜினோமோட்டோ சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். இறக்கவும்.

வேறு ஒரு கடாயில் 1/4 எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும் 8 மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி ஆற விடவும்.

ஆறியதும் சாதத்தில் ஊற்றிக் நன்கு கலந்து விடவும்.

சூப்பர் ஆன காரமான சாதம் தயார்.

இடியாப்பம் பாயா

இடியாப்பம்
பச்சரிசி ---------------------------4 கப்
புழுங்கல் அரிசி ----------------1 கப்
செய்முறை-
இரண்டு அரிசிகளையும் ஒன்றாக கலந்து 4- 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் நன்கு கழுவி களைந்து நிழலில் காய விடவும்.
சிறிது ஈரம் இருக்கும் போதே மிசினில் மாவாக அரைக்கவும். கொஞ்சம் கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
கடாயை காய வைத்து கொஞ்சம், கொஞ்சமாக மாவைப் போட்டு வறுத்து எடுக்கவும். சிம்மில் வைத்து செய்யலாம்.
கோலம் போட்டால் பிசிறு இல்லாமல் கம்பி இழுக்க வர வேண்டும்.
பின் கட்டி இல்லாமல் சலித்து வைக்கவும்.
தேவையான போது தேவையான அளவு மாவை எடுத்து சிறிது உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை தெளித்துப் பிசையவும்.
இடியாப்ப குழாயில் போட்டு இட்லித் தட்டில் பிழியவும்.
6-7 நிமி வெந்து விடும்.


இதற்கு super combination பாயா !!
சென்னையில் இது ஒரு famouse dish.
இதற்கு ஒரு தனி fans இருக்கிறார்கள்.
சில குறிப்பிட்ட கடைகளும் உண்டு.
o.k. இப்ப நாம் எப்படி இதை செய்யலாம் என்று பார்ப்போம்.


பாயா

ஆட்டுக்கால் ---------------------------2
சின்ன வெங்காயம் --------------------ஒரு சிறிய கப்
தக்காளி [மீடியம் ]----------------------2
இஞ்சி ------------------------------------ஒரு சிறிய துண்டு
பூண்டு ------------------------------------6 பல்
பட்டை ------------------------------------1 துண்டு
லவங்கம் ---------------------------------2
ஏலக்காய் ---------------------------------2
பச்சை மிளகாய் -------------------------2
பொட்டுக் கடலை -----------------------2 ts
தேங்காய் -------------------------------1 மூடி
எண்ணை -------------------------------3ts

செய்முறை-
ஆட்டுக்காலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டவும்.
தேங்காய் கடலையை ஒன்றாக அரைத்து ஒன்றாம், இரண்டாம் பால் எடுக்கவும்.
குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு சிறிது உப்பிட்டு வதக்கவும்.
அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதில் ஆட்டுக்காலைச் சேர்த்து சிறிது வதக்கி இரண்டாம் பாலை [2 டம்ளர் ]சேர்த்து குக்கரை மூடவும்.
5-6 விசில் விடவும்.
பின் குக்கரைத் திறந்து முதல் பாலை ஊற்றி 3 நி கொதிக்க விடவும்.
சுவையான பாயா ready.

திங்கள், நவம்பர் 15, 2010

சாம்பார்ப் பொடி

தனியா --------------------------------1/4 கி
மிளகாய் வற்றல் --------------------1/4 அல் 1/2 கி [உங்கள் விருப்பம்]
விரலி மஞ்சள் [நீளம்] ---------------15
மிளகு ---------------------------------50 கிராம்
வெந்தயம் ---------------------------50 கிராம்
துவரம் பருப்பு ----------------------100 கிராம்
கடலைப் பருப்பு --------------------100 கிராம்
உளுத்தம் பருப்பு --------------------75 கிராம்
செய்முறை-
பொருட்களை நன்கு வெயிலில் காய வைக்கவும்.
மிசினில் அரைக்கவும்.
அல்லது எண்ணையில்லாமல் வெறும் வாணலியில் கொஞ்சம்
சூடு வரும்வரை வறுத்து அரைக்கவும்.
அரைத்தவுடன் மூடக்கூடாது.
அரைத்தவுடன் பொடியை ஒரு பேப்பரில் பரத்தி வைக்கவும்.
நன்கு ஆறியவுடன் எடுத்து வைக்கவும்.
கை படாமல் வேண்டும் போது ஒரு ஈரமில்லா கரண்டியில் எடுக்கவும்.

மற்றொரு முறை-
மேலே சொன்ன பொருட்கள் + + +
சீரகம் ------------------------50 கிராம்
பெருங்காயம் ---------------2 to 3 ts
கட்டிப் பெருங்காயம் என்றால் ஒரு சிறு துண்டு
கருவேப்பிலை -----------------ஒரு கைப்பிடி
உப்பு -------------------------------கொஞ்சம்
இது போட்டால் வீடே மணக்கும்.

முதல் வகைப் பொடியில் உளுந்து வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

உப்பும் கல்லுப்பாக [crystal salt] இருந்தால் அதன் சுவையே தனி.
உப்பு சேர்த்து அரைத்தால் ரொம்ப நாள் பூச்சி, வண்டு வராமல் இருக்கும்.

ஞாயிறு, அக்டோபர் 31, 2010

சுலப சமையல்

வெளி நாட்டில் படிக்கும் நம்ம நாட்டு பிள்ளைகளுக்கு நான் கண்டு பிடித்த
சுலப சமையலின் தொடர்ச்சி -
இன்றைய ஸ்பெஷல் தக்காளி recipes
as usual oil base ஆரம்பத்திலேயே இஞ்சியை துருவிப் போடவும்.
அதாவது கேரட் துருவியில் தோல் எடுத்த இஞ்சியை துருவிப் போடவும். இதற்கு கடுகு, நிறைய வெங்காயம், நறுக்கிய மிளகாய், துருவிய இஞ்சி,நறுக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
நிறைய தக்காளி பேஸ்டை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கொத்துமல்லித் தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
தேங்காயைக் கரைத்தும் ஊற்றலாம். _______________________________________________________________________________________________alternative - இதில் முட்டையை ஊற்றலாம்.
குழம்பு நன்கு கொதித்து இறக்குவதற்கு முன் நிதானமாக முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதாவது பாத்திரத்திற்கு மேல் முட்டையை பிடித்துக் கொண்டு ஸ்பூனால் நடுவில் உடைத்து கையில் குழம்பு தெறிக்காமல் ஊற்றவும்.
கரண்டி போடாமல் 2 நிமி விடவும்.
முழுமுட்டை வெந்து மிதக்கும். _____________________________________________________________________________________________________alternative முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு கொஞ்சம் போட்டு நன்கு கலக்கி குழம்பில் ஊற்றி கரண்டியால் மெதுவாக கிளறி விட்டால் குழம்பு முழுவதும் சின்னச்சின்ன துண்டுகளாக மிதக்கும்.
வெந்தமுட்டையைகட்பண்ணியும்போடலாம்
alternative - இந்த குழம்பில் நேற்று சொன்ன vegetable balls எண்ணையில் பொறித்து [போண்டா] போடலாம்.
முழு போண்டாவாகப் போடலாம். or உதிர்த்துப் போடலாம்.
முழு போண்டா போடுவதானால் சின்ன போண்டாவாக இருக்க வேண்டும். __________________________________________________________________________________________________-alternative - சிக்கன் துண்டுகளை உப்பு, மிளக்காயத்துள் போட்டு 10 நிமி ஊறவிட்டு இந்த குழம்பில் போடலாம்.
ஆனால் குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போதே போட்டால்தான் சிக்கன் வேகும்.
அல்லதுசிக்கனைப்பொறித்துப்போடலாம்.
___________________________________________________________________________________________________வெங்காயத்தை கேரட் துருவியில் {கையை சீவாமல் }துருவவும்.
வெங்காயத்தை அரைத்த effect வரும்.
மூன்று பெரிய வெங்காயமாகத் துருவவும். [வெங்காயத்திற்கு தோலுரிக்க வேண்டும். தெரியும் தானே!!!!!!! ]
நான்கு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும். அல்லது துருவவும்.
6 ts எண்ணையில் கடுகு, சீரகம், துருவிய இஞ்சி, துருவிய வெங்காயம், துருவிய தக்காளி போட்டு வதக்கி 3 ts மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
அதிலுள்ள தண்ணீர் சுண்டி கெட்டியாக வரும் போது இறக்கவும்.
தக்காளிச் சட்னி. ________________________________________________________________________________________________________இதை இதை baseyaaka வைத்து சில recipes செய்யலாம்.
எண்ணையில் கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி இந்த சட்னியில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி கொத்துமல்லித் தூள் போட்டால் முதலில் சொன்ன தக்காளிகுழம்பு, முட்டைக் குழம்பு செய்யலாம். _________________________________________________________________________________________________இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம்.
சப்பாத்தி, பிரட் மேலே லேசாக பட்டர் தடவி அதன் மேல் இதைத் தடவவும். இன்னொரு பட்டர் தடவிய சப்பாத்தியை வைத்து சுருட்டினால் சப்பாத்தி ரோல்.
சப்பாத்தியில் இந்த சட்னி மேல் துருவிய cheese போடலாம். ______________________________________________________________________________________________________எண்ணையில்நறுக்கியவெங்காயம்,கடுகு,சீரகம்,மிளகாய்தாளித்து இரண்டு தக்காளிவெட்டிப் போட்டு இந்த சட்னி கொஞ்சம் போட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு வேண்டிய அளவு தண்ணீர்ஊற்றி அரிசி போட்டால் தக்காளி சாதம். ___________________________________________________________________________________________________எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், அதைவிட கொஞ்சம் அதிகமாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி மிளகாத் தூள், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட்டு கெட்டி ஆனதும் இறக்கவும். சப்பாத்தி side dish . ________________________________________________________________________________________________________
வெங்காயத்தை தக்காளியை நீளமாக நறுக்கவும்.
எண்ணையில் கடுகு, மிளகாய் போட்டு வதக்கி வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த் தூள் போட்டு வதக்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக விட்டு இதில் முட்டையை ஊற்றி முழு முட்டையை மிதக்க விடவும்.
வெந்த முட்டையை துண்டுகளாக்கியும் போடலாம்.
முட்டைக்கு பதில் பட்டாணி போடலாம். ____________________________________________________________________
யாரவது இதைப் படித்து செய்து பார்த்தால் எனக்கு தெரியப் படுத்துங்கள்.
நான் சந்தோசப் படுவேன்.

சனி, அக்டோபர் 30, 2010

சுலப சமையல்

வெளிநாட்டில் படிக்கப் போகும் நம்ம பசங்களுக்காக நான் கண்டு பிடித்த சுலபமான samaiyal இதில் அங்கு கிடைக்கும் காய்கறிகளை சேர்த்து பல மாற்றங்களை செய்யலாம். சமையலே அவரவர் சுவையான கற்பனைகள் தான். இங்கு நான் வெளி நாடுகளில் பொதுவாக கிடைக்கும் காய்களை வைத்து செய்யும் முறைகளை தருகிறேன். முயற்சி செய்து பாருங்கள்.
உருளைக் கிழங்கு recipes -

.உருளைக் கிழங்கு மூழ்கும் அளவு நீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் தூள்,உப்புப் போட்டு இரண்டு விசில் விடவும்.
சுடுதண்ணியை கிழே ஊற்றி விட்டு அதில் பச்சைத் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் விட்டு தோலுரிக்கவும். நல்லா ஆறியதும் fridge எடுத்து வைக்கவும்.
எண்ணையில் கடுகு, சீரகம், போட்டுப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், வதக்கி உப்புப் போடுவது எல்ல சமையலுக்கும் அடிப்படை.
தக்காளி, தனியாப் பொடி, மிளகாய்த் தூள், பச்சைமிளகாய், வரமிளகாய் என்று
செய்யும் recipe தகுந்த மாதிரி சேர்க்க வேண்டும்.
ஆனால் கிழங்கு என்றால் கட்டாயம் இஞ்சி, பூண்டு போட வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் போடலாம்.
தக்காளிக்குப் பதில் தக்காளி பேஸ்ட் போடலாம். ருசி கொஞ்சம் மாறுபடும்.
கிழங்கை நன்கு கையால் பிசைந்து கொள்ளவும். தண்ணீயே சேர்க்க கூடாது.
oil basil frozen mixed vegetables போட்டு ரொம்ப, ரொம்ப கொஞ்சமாக தண்ணீ ஊற்றி fry பண்ணி பிசைந்து வைத்திருக்கும் கிழங்கைப் போட்டு வதக்கவும்.
அடுப்பை simil வைக்கவும்.
கொஞ்சம் கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து [மாவு கரைத்தது நீர்க்க இருக்கணும்] ஊற்றி கட்டி சேராமல் கலந்து விடவும்.
மஞ்சத் தூள், மிளகாய்த்தூள், உப்பு போடவும்.
3 நிமி கொதித்ததும் இறக்கவும்.
இது சப்பாத்தி, தோசை side dish
-------------------------------------------------------------------------------------------------alternative -கோதுமை மாவிற்கு பதிலாக கிழங்கில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும். இந்த இரெண்டுக்கும் தக்காளி பேஸ்ட் போடலாம்.
-------------------------------------------------------------------------------------------------
alternative - உருளையை கையால் உதிர்க்கவும். நோ பிசையல். அதைப் போட்டு வதக்கி தக்காளிப் பேஸ்டில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி அதில் தனியாத் தூள் [coriyaander powder தான் ]போட்டு கொதிக்க விடவும். வேண்டும் என்றால் தேங்காய் கரைத்து ஊற்றி 3 நிமி கொதிக்க விடவும்.
fresh தக்காளி என்றால் சிறியதாக நறுக்கிப் போடவும்.
-------------------------------------------------------------------------------------------------
oil basil பிசைந்த கிழங்கு, மிளகாய்த்தூள், போட்டு 3 நிமி வதக்கஆறவிடவும்.
உருண்டை பிடிக்கவும்.
சப்பாத்தி மாவை சிறிய வட்டமாகதேய்த்து அதன் நடுவில் இந்தஉருண்டையை வைத்து மூடி மறுபடியும் தேய்க்கவும். தோசைக்கல்லில் லேசாக எண்ணை தடவி சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் எண்ணை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாயும் போடலாம். நறுக்கிய பின் தண்ணீரில் அலசி எடுத்தால் விதைகள் போய் விடும்.

-------------------------------------------------------------------------------------------------------------
இந்த உருண்டைகளை நீர்க்கக் கரைத்த கோதுமை மாவில் நனைத்து எண்ணையில் பொரித்தால் vegetable போண்டா.
மாவில் நனைத்து எடுக்கும் போது சொட்டற மாவை பாத்திர விழும்பில் வழித்து விட்டுத் தான் எண்ணையில் போட வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------
அப்பளத்தை ஒரு முறை தண்ணீரில் நனைத்து எடுத்து விடவும். அதன் ஒரு பாதியில் இந்த உருண்டையை [கொஞ்சம் சிறிய உருண்டை] வைத்து அப்பளத்தை மடித்து ஓரத்தை அழுத்தி மடிக்கவும். பின் கவனமாக எண்ணையில் பொரிக்கவும்.
எண்ணைக்குள் போடும் போது மெதுவாகப் போடவும்.
------------------------------------------------------------------------------------------------மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசையவும். [உருண்டை பிடிக்க வரணும்]
எண்ணையில் பொரிக்கவும். போண்டா
___________________________________________________________________________________________________
வெங்காயத்தை சன்னமாக நீளமாக நறுக்கவும். கோதுமை மாவில் இதைப் போடவும்.உப்பு, மிளகாய்த் தூள் போட்டு கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்து ரொம்ப, ரொம்ப கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துப் பிரட்டவும். உதிரி உதிரியாக வரணும். எண்ணையில் உதிர்த்த மாதிரி போட்டு சிவந்ததும் எடுக்கவும். பக்கோடா.
-----------------------------------------------------------------------------------------------
பிரெட்டை தோசைக்கல்லில் மிதமான சூட்டில் இரண்டு பக்கங்களையும் லேசாக வாட்டி கையால் பொடித்தால் பிரெட் தூள்.
__________________________________________________________________________________________________ வேகவைத்த உருளைக் கிழங்கை நன்கு கையால்ப் பிசைந்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய்,கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்துப் பிசைந்து சதுரமாகத் தட்டி எண்ணையில் பொரிக்கலாம்.
[இதில் frozen vegetables சேர்த்தும் செய்யலாம்].
அல்லது தோசைக்கல்லில் ஒரே சமயத்தில் நாலைந்து சதுரங்களை வைத்து சுற்றிலும் எண்ணை விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டுஎண்ணை ஊற்றி சிவந்ததும் எடுக்கவும்.