செவ்வாய், மே 10, 2011

ON LINE GAS BOOKING

தற்போது தொலை பேசி மூலம் gas  பதிவு செய்ய முடியாது.

online booking தான் செய்ய முடியும்.

 வழக்கம் போல் ஆரம்ப நிலையில் கொஞ்சம் [நிறைய] குழப்பங்கள்

உள்ளது.

நான் பதிவு செய்து விட்டேன் என்று அசால்ட்டாக இருந்து விட்டேன்.

ஒருநாள் காலையில் திடீர் என்று அடுப்பு நின்று விட்டது.

பதிவு செய்து பத்து நாள். 

அப்போதுதான் எனக்கு உறைத்தது நான் பதிவு சரியாகச் செய்யவில்லை

என்பது.

 விருந்தாளிகள் வேறு.

ஓடு பக்கத்து வீ ட்டுக்கு. அவர்களிடம் extra cylindar இருக்க வேண்டுமே

என்று ஒரு மிக சிறிய பிரார்த்தனை.[பக்கத்து வீடு என்பது NEXT DOOR]

ஆண்டவன் புண்ணியத்தில் கொடுத்தார்கள் WITH ONE CONDITION

 அதாவது இரண்டு நாளில்   நான் என்னுடைய CYLINDER  தர வேண்டும்

என்று.

அப்போதைய பிரச்சனை தீர்ந்தது.

மறுபடியும் சாமிக்கு ஒரு விண்ணப்பம்

இர்ண்டு நாளில் புக்????????? பண்ணியது   வர வேண்டும் என்று.

 என் கணவர் ஆபத்பாந்தவனாய் அன்றே கரெக்டாக பதிவு பண்ணி

விட்டார்.

அதுவும் சரியாக மூன்றாவது நாள் வந்து விட்டது.

 எங்கள் வீட்டில் இறக்காமல் DIRECT ஆக பக்கத்து வீட்டிலேயே வைத்த

பின் தான் எனக்கு தூக்கமே வந்தது.

எங்கள் வீட்டு வேலை செய்யும் பெண 'அம்மா பதிவு பண்ணத்

தெரியலை, என்னென்னவோ கேக்குது; ஒன்றும் புரியலை, எப்படி பதிவு

செய்வது' என்று இந்த பிரகஸ்பதியிடம் கேட்கிறாள்.

 என்னத்தை சொல்ல?

'விவரங்களை எழுதி வாங்கிட்டு வா' என்று சமாளித்தேன்.

 கணவரிடம் சொல்லி விடலாம் என்ற தைரியம்.

ஆனா என் நேரம் ; அவர் தீடீர் என்று வெளிஊருக்குப் போய் விட்டார்.

இவள் வந்து நிற்கிறாள்;

ஆனால் அவள் கொண்டு வந்த துண்டு பேப்பரில் விவரங்களுடன் கீழே

கொடுத்துள்ள information இருந்தது.

அவள்   gas   வாங்கும் கடைக்காரர் ரொம்ப நல்லவருங்க;

 பிரிண்ட் பண்ணியே கொடுத்துவிட்டார்.

இதோ உங்களுக்காக;


Call 8124024365

Press 1 for Tamil

Press 2 for English

Press Distributor number with STD code

Press 1 to confirm Distributor Number

Press your Consumer Number

Press 1 to confirm Consumer Number

Press 1 to refill booking

Press 1 to mobile number registration

முக்கிய குறிப்பு--

மேலே கொடுத்துள்ளபடி நீங்களாகவே வரிசையாக அழுத்தக் கூடாது.

முதல் எண்ணிற்கு நீங்கள் கூப்பிட்ட உடன், பதிவு செய்யப்பட்ட குரல்

உங்களுக்கு இந்த விவரங்களை சொல்லும்;

அது இந்த வரிசைப் படிதான் இருக்கும்.

சொல்லச், சொல்ல நீங்கள் எண்களை அழுத்த வேண்டும். 

புரிந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

சனி, மே 07, 2011

2011-2012----- குரு பெயர்ச்சி பலன்கள்


கர வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி 


ஞாயிற்றுக் கிழமை


(8/9.5.2011) சுக்ல பட்சத்து 


சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம்

சூலம் நாமயோகம் தைத்துலம்


 நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள

சித்தயோகத்தில் குரு ஹோரையில் 


சூரியம் உதயம் புக பெயர்ச்சி

நாழிகை 48க்கு சரியான நேரம் 


பின்னிரவு மணி 1.09க்கு

உபயவீடான மீனத்திலிருந்து


சர வீடான மேஷத்திற்குள்

குருபகவான் நுழைகிறார்.

குரு பகவான் மே 9 -2011 திங்கள் கிழமை அதிகாலை


[அதாவது மே 8நள்ளிரவு]   


 1.09 மணிக்கு  மீன ராசியில் இருந்து 


மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மே 17 -2012 வரை இந்த ராசியில் சஞ்சாரிப்பார்.
குரு பெயர்ச்சி என்பது ஓராண்டு காலம் ஆகும்.
09-05-2011  முதல்    17-05-2012 ௦ வரை

நவகிரகங்கள் மிகவும் சுபராகப் கருதப்படுபவர் குருவாவார்.

இவர் ஒவ்வொரு வருஷமும் 


ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப்

பெயர்ச்சியாவதையே 


நாம் "குருப் பெயர்ச்சி" என்கிறோம்.

இவர் பெயர்ச்சி ஆகும் பொழுது 


ஒவ்வொருவரின் தனிப்பட்ட

வாழ்க்கையாகட்டும் அல்லது


 நாடாகட்டும் அல்லது உலகமாகட்டும்

எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை ஏற்படச் செய்வார்

குரு பகவானை மனதால் நினைத்து

 குருவுடைய காயத்திரி மந்திரமான

விருஷ த் வஜாய வித்மறே

!க்ருணி ஹஸ்தாய திமஹி !

தந்தோ குரு ப்ரசோயாத்.

என்பதை வியாழக்கிழமை தோறும் சொல்லி

அவரை வணங்கிவர

வரக்கூடிய கெடுபலன்களைக் கலைந்து

நற்பலன்களை நமக்கு நல்குவார்

என்பதில் ஐயமில்லை


குரு பெயர்ச்சி பலன்கள்-

மேஷம-50%

சொல்லவேண்டிய பாடல்-


காசினி இருளை நீக்கும்

கதிர் ஒளியாகி எங்கும்

பூசனை  உலகோர் போற்ற

பொசிப்புடன் சுகத்தை நல்கும்

வாசியேழுடைய தேர்மேல்

மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய்

செங்கதிரவனே போற்றி! போற்றி!

பரிகாரம்-

தினமும் சூரியனை,

சூரியோதய வேளையில் வழிபடுவதும்,

சூரியனார் கோவிலுக்கு சென்று வருவதும்

 நற்பலன் தரும்.



ரிஷபம் -55%




சொல்ல வேண்டிய பாடல்-


கருவுடை மேகங்கள் கண்டால்

உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்

உருவுடையாய்! உலகேழும்

உண்டாக வந்து பிறந்தாய்

திருவுடையாள்   மணவாளா!

திருவரங்கத்தே கிடந்தாய்!

மருவி மணம் கமழ்கின்ற

மல்லிகைப்பூ சூட்ட வாராய்!

பரிகாரம்-

ரங்கநாதரை வழிபடுவதும்,

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று வருவதும்

நற்பலன் தரும்.


மிதுனம்-75%




சொல்ல வேண்டிய பாடல்-

வந்த வினையும் வருகின்ற

வல்வினையும்  கந்தனென்று

சொல்லக் கலங்கிடுமே!

செந்தில்நகர் சேவகா என்று

திருநீறு அணிவார்க்கு

மேவ வராதே வினை!

பரிகாரம்-


முருகப் பெருமானை வணங்குவது

 நற்பலன் தரும்.


கடகம்-60%




சொல்லவேண்டிய பாடல்-

வாள்நுதற்  கண்ணியை

விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி

பேணுதற்கு எண்ணிய

எம்பெருமாட்டியை  பேதை நெஞ்சில்

காணுதற்கு அன்னியன் அல்லாத

கன்னியைக் காணும் அன்பு

பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ

முன்செய் புண்ணியமே!

பரிகாரம்-

அபிராமி அன்னையை வழி படுவதும்,

திருக்கடையூர் சென்று வழிபடுவதும்

நற்பலன் தரும்.


சிம்மம்-90%




சொல்லவேண்டிய பாடல்-

யாவையும் படைப்பாய் போற்றி

யாவையும் துடைப்பாய் போற்றி

யாவையும் ஆனாய் போற்றி

யாவையும் அல்லாய் போற்றி

யாவையும் அறிந்தாய் போற்றி

யாவையும் மறந்தாய் போற்றி

யாவையும் புணர்ந்தாய் போற்றி

யாவையும் பிரிந்தாய் போற்றி.

பரிகாரம்-

சிவபெருமானை வழிபடுவதும்,

மதுரை சுந்தரேஸ்வரரை வழிபடுவதும்

 நற்பலன் தரும்.

கன்னி-50%


சொல்லவேண்டிய பாடல்-

மாசுமெய்யர் மண்டைத்தேரர்

குண்டர் குணமிலிகள்

பேசும் பேச்சை மெய்யென்று

நம்பி அன்நெறி செல்லன்மின்

மூசுவண்டார் கொன்றை சூடி

மும்மதிலும் உடனே

நாசம் செய்த நம்பெருமான்

மேயது நள்ளாறே!

பரிகாரம்-

ஏழரைச்சனி தொடர்வதால் சனிக்கிழமைகளில்

சனீஸ்வரருக்கு எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும்,

திருநள்ளாருக்கும் ,

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்குச்

சென்று வழிபடுவதும்

நற்பலன் தரும்.


துலாம்-80%


சொல்லவேண்டிய பாடல்-

காற்றின் மைந்தனை

கதிரோன் சீடனை

கார்வண்ண ராமன் தூதனை

பார்கண்ட பரமன் போல்வனை

தார்சூடும் தூயோனை

துதி செய்குவோம்!

பரிகாரம்-

ஆஞ்சநேயரை வழிபடுவது நற்பலன் தரும்.


விருச்சிகம்-60%


சொல்லவேண்டிய பாடல்-

வாழ்வு ஆனவள்

துர்க்கா வாக்குமானவள்

வானில் நின்றவள்

இந்தமண்ணில் வந்தனள்

தாழ்வு அற்றவள்

துர்க்கா தாயும் ஆனவள்

தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே!


பரிகாரம்-

துர்க்கை வழிபாடு நற்பலன் தரும்.


தனுசு-  55%


சொல்லவேண்டிய பாடல்-


இடர்கள் யாவும் எவனருளால்

எரிவீழும் பஞ்சென  மாயும்

தொடரும் உயிர்கள் எவனருளால்

கரர் வாழ் பதியும் உறச்செய்யும்

கடவுள் முதலோர்க்கு ஊறின்றி

கருமம் எவனால் முடிவுறும்

அத்தடவ மருப்பு கணபதி

பொன் சரணம் சரணம் அடைகின்றோம்!


பரிகாரம்-

விநாயகர் வழிபாடு நற்பலன் தரும்.


மகரம் -  55%


சொல்லவேண்டிய பாடல்-


மென்னடையன்னம் பரந்து விளையாடும்

வில்லிபுத்தூர் உறைவான் தன்

பொன்னடி காண்பதோர் ஆசையினால்

என்  பொருகயற்கண்ணினை   துஞ்சா

இன் அடிசிலொடு பாலமுதூட்டி

எடுத்த என் கோலக்கிளியை

 உன்னொடு  தோழமை கொள்ளுவன்

 குயிலே!உலகளந்தான் வரக்கூவாய்  


பரிகாரம்-

ஆண்டாளை வழிபடுவதும்

ஸ்ரீ வில்லிப்புத்தூர்ஆண்டாள் கோவில் சென்று வழிபடுவதும் 

நற்பலன் தரும்.    


கும்பம்- 50%


சொல்லவேண்டிய பாடல்-

பாடிக்கொண்டு ஆடிடப்   பணிந்து  

இடும் அன்பர் தம் பாதமலர்  

சூடிக் கொண்டு ஆடித் திரிந்திடவே 

என்னைத் தொண்டு கொள்வாய் 

தேடிக் கொண்டு ஆடி வருவோர்கள் 

வல்வினைச் சிக்கை எல்லாம் 

சாடிக் கொண்டு ஆடிய 

வாகாழி யாபதுத் தாரணனே  


பரிகாரம்-

பைரவரை வழிபடுவது நற்பலன் தரும்.


மீனம்-75%


சொல்லவேண்டிய பாடல்-

செடியாய வல்வினைகள் 

தீர்க்கும் திருமாலே 

நெடியானே வேங்கடவா 

நின் கோவில் வாசலில் 

அடியாரும் வானவரும்

அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன்

பவளவாய் காண்பேனே!


பரிகாரம்-

வெங்கடாஜலபதியை வழிபடுவது

 நற்பலன் தரும்.
           







வியாழன், மே 05, 2011

அக்னி நட்சத்திரம்

 
கோடை காலத்தில் உச்சக்கட்ட வெயில் தாக்கும் அக்னி நட்சத்திரம்
  04  -05-2011   தொடங்குகிறது

மே 4ல் ஆரம்பமாகி மே 28ம்தேதி வரை தொடர்கிறது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 மாலை 6.36 மணிக்கு

துவங்குகிறது.

இந்த நாட்களில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும்.

அக்னி நட்சத்திர ஆரம்பநாளும் முடிவு நாளும் எல்லா ஆண்டுகளிலும்

ஒன்றுபோலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.



24 நாட்கள் கத்திரி வெயில் சுட்டெரிக்கும்
 பொதுவாக கத்திரி வெயில் 3 வாரம் நீடிக்கும்.
 எனினும், அக்னி தொடங்குவதற்கு முன்பும், வெயில் வாட்டும்.
இதை முன் கத்திரி என்கின்றனர்.
அக்னி வெயில் முடிந்த பிறகும் 2 வாரத்துக்கு வெயில் வாட்டி எடுக்கும்.
 இதை பின் கத்திரி என்கின்றனர்

சித்திரை மாதம் முதல் மேஷராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார்.

எனவே மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற

நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது

விதிக்கப்பட்டது.

 சித்திரை முதல்நாளில் அசுவினியில் நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில்

சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி

நட்சத்திரம் எனப்படுகிறது.

சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம்

வெயிலின் அளவு அதிகரிக்கும் போது வெப்ப சலனம் ஏற்பட்டு இடியுடன்
மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
 சித்திரை 21ல் துவங்கி வைகாசி 14 வரை 25 நாட்கள் இது நீடிக்கும்
.இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என பஞ்சாங்கங்களில்
சொல்லப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தில் கிணறு வெட்டுதல், தோட்டம் வைத்தல், மரம்
நடுதல், விதை விதைத்தல் போன்ற சுபகாரியங்களைத் தவிர எல்லாவிதமான
நல்ல செயல்களையும் செய்யலாம். அதில் தவறில்லை.
அக்னி வெயிலில் அலைபவர்களுக்கு தோல் வியாதி ஏற்பட வாய்ப்புண்டு.
இந்நோயைத் தவிர்க்க வெயிலில் அலைவதைத் தவிர்ப்பதுடன், '
ஓம் பராசக்தியே நமஹ'
அல்லது
'ஸ்ரீமதே ராமானுஜாய நம'
என்ற மந்திரங்களைச் சொல்வது நன்மை தரும்.
சிவாலயங்களில் துர்க்கையையும்
பெருமாள் கோயில்களில் ராமானுஜரையும்
அக்னி நட்சத்திர காலத்தில் தரிசிப்பது விசேஷம்.
 இதனால், அக்னி காலத்தில் ஏற்படும் தோல் வியாதிகள் ஏற்படாது என்பது
நம்பிக்கை.
அக்னி நட்சத்திரன் போது முன் ஏழு, பின் ஏழு நாட்கள் மிக உக்கிரமாக
இருக்கும் என்பது கிராமத்து வழக்கு.
சித்திரையில் பின் ஏழு நாட்களையும், வைகாசியில் முன் ஏழு

நாட்களையுமே இவ்வாறு குறிப்பிடுவர்.

இதன்படி மே 8 (சித்திரை 25) முதல் 21ம் தேதி (வைகாசி 7) வரை

வெயிலின் கடுமை அதிகமாகும்.

சில நேரங்களில் மழை பெய்து கழிவதும் உண்டு.

அவ்வாறு கோடை மழை பெய்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க

இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்திக்க வேண்டும்.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னிபகவான்.

இவர் நெருப்பு ரூபமாய் காணப்படுவதால், இதனையே அக்னி நட்சத்திரம்

என்கின்றனர்.

முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாது நடைபெற்ற

சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல்

நலிவு ஏற்பட்டது.

அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன்

புறப்பாட்டார்.

இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும்,

தாவரங்களும், தங்களை காக்க வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக்

கொண்டனர்.

வருணபகவானும், விடாது மழை பொழியவே

அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.

காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னிதேவன்

முறையிட்டதால் அவர், அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார்.

அர்ஜுனனும், தனது அம்புகளினால் காட்டை சுற்றி அரண் எழுப்பி தீ

அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொண்டார்.

அப்போது அக்னிதேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார்.

21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது.

இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்துவிட்டு

கிளம்பினார்.

இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன

புராணங்கள்..

 

செவ்வாய், மே 03, 2011

மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது.
பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார்.
"எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.
பத்தாம் நாள் போர் அனறு,
பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்.
அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது.
உடன் தான் இறக்க நினைத்தார்.
அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.
சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார்.
அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன.
உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர்.
உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார்.
 தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார்.
துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.
அர்ச்சுணனை நோக்கி,"சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக" என்றார்.
அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான்.
உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது.
பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.
மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.
இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.
நன்றி--முத்துக்கமலம்

திங்கள், மே 02, 2011

பூமி

20.12.2012 க்குப் பிறகும் நம் பூமி வாழும்

தென் அமெரிக்காவில் கி.மு.3100 முதல் கி.பி.1600 வரை மயன் நாகரீகம் இருந்தது. அவர்களின் நாட்காட்டி(காலண்டர்) கி.பி.2012 உடன் முடிவதால் அதைப் பற்றி ஒரு தேவையற்ற பயம் உலகம் முழுக்கப் பரவிக்கொண்டிருக்கின்றது.

கி.பி.2012 டிசம்பர் 21 அன்று சூரியனின் நேர்கோட்டுப்பாதையில் பூமி வரப்போகிறது. இதனால் பூமியின் காந்தப்புலன்கள் மாறப்போகின்றன. (இதை இன்றைய புவியியல் வல்லுநர்கள் உண்மை என்கிறார்கள்.ஆனால் எப்போது என்பதை அறுதியிட முடியவில்லை)

இதனால், மலை அளவுக்கு சுமார் 18,000 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புமாம்.எரிமலைகள் வெடிக்குமாம்.பல கடலோரப்பகுதிகள் மூழ்குமாம்.சரி பார்ப்போம்.இதோ வந்துடும் கி.பி.2012.
இதுபற்றி ஒரு இணையதளம் இருக்கின்றது.ஆங்கிலத்தில்www.endoftime2012.com

சில்லி சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்


எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ

மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)

சோளமாவு: 1 தே. கரண்டி

முட்டை : 1

பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)

இஞ்சி : ஒரு சிறு துண்டு

டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி

சோயா சாஸ் : 2 தே. கரண்டி

சில்லி சாஸ்: 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் : சிறிதளவு

உப்பு தேவையான அளவு

எண்ணை பொரிக்க,

தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி

அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி



செய்முறை


*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி

வைத்துக்கொள்ளவும்.*

ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து

இறைச்சியுடன் சேர்க்கவும்

உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ்

ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.*

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம்

கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.*

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.*

ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும்

பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து

கிளறவும்.*

 சிறிது நேரம் சென்றபின்

 2 தே.கரண்டி சோயா சாஸ்,

சில்லி சாஸ், 1 தே.கரண்டி

4 தே. கரண்டி டொமாடோ சாஸ்

போட்டு கிளறிவிடவும்
.
சில்லி சிக்கன்  குழம்பு    தயார்.

பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க
.
குறிப்பு

விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய்

போட்டுக்கொள்ளலாம்.

இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்..

உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை

அலாதியாக இருக்கும்[.விருப்பம் ]

மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால்

 பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து

வதக்கிக்கொள்ளவும்
.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.

ஞாயிறு, மே 01, 2011

குரு வழிபாடு.

09-05-2011--------- 17-05-2012
 குரு பகவான், கர வருஷம் சித்திரை மாதம் 25 - ஆம் தேதி

(8-5-2011) ஞாயிற்றுக்கிழமை    நள்ளிரவு, 1.09 மணிக்கு மீன  ராசியில் இருந்து

மேஷ ராசிக்கு  இடப் பெயர்ச்சி ஆகிறார்.
 இந்த ராசியில் மே 17 ,2012 வரை சஞ்சாரிப்பார்.
அதாவது ஓராண்டு காலம் குருப் பெயர்ச்சி காலம் ஆகும்.

குரு பெயர்ச்சியால் நற்பலன் பெரும் ராசிகள்-
மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம்
சுமாரான பலன் பெரும் ராசிகள்-
ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம்
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்-

மேஷம, கடகம், கன்னி




கிரகங்களிலேயே சுப கிரகம் குரு.

இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர,

இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது.

இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது.

குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும்.

‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட

வாக்கு இவரை குறிப்பதுதான்.

ஒருவருக்கு திருமண பாக்கியம் கிடைக்க குரு பலம் அவசியம்.
 குரு பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும்  அந்த
இடத்திலிருந்து 5,7,9இடத்து பார்வை பெற்ற ஸ்தானங்கள் குரு பலம்
அடைகின்றன 

குருமந்திரம்
ப்தகாஞ்சன வர்ணாபம் சதுர்புஜ ஸமந்விதம்
                            தண்டாக்ஷ ஸத்ர மாலாம் சகமண்டலு வரான்விதம்
பீதாம்பரதரம் தேவம்  பீத கந்தானு லேபனம்
புஷ்பராக மாயம் பூஷணம் விசித்ர மகுடோஜ்வலம்
ஸ்வர்ணாஸ் வரத மாநடம் பீதத்வ ஜ ஸுஸோபிதம்!

கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும்.
அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம்.
நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும்.
அங்கும் வழிபாடு செய்யலாம்.
 திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார்.
எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை
சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.

‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே

க்ரூணி ஹஸ்தாய தீமஹி

தந்தோ குரு பிரசோதயாத்’

அல்லது

ஓம் குரு தேவாய வித்மஹே

பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’ என்ற

குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’

என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு
செல்லலாம்.
அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில்
கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை
சுண்டல் வழங்கலாம்
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார்.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.

பார்வதி தேவி இமவான் மகளாக பிறந்து வளர்ந்த நேரத்தில்

பிரம்மதேவருடைய மகன்களான  சனகன், சனந்தன், சனாதனன்சனத்

குமுரன் ஆகிய நான்கு ரிஷகள் சிவபெருமானிடம் வந்து ஒரு

கோரிக்கையை வைத்தனர்.. "வேதங்கள் , ஆகமங்களின் உட்பொருளை

உபதேசிக்க வேண்டினர்.

அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு வேதங்களை

உபதேசிப்பதற்காக சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியதாக

புராணங்கள் கூறுகின்றன.

நவக்கிரக பீடத்தில் உள்ள குருவை முல்லை மலரால் அர்ச்சனை
செய்யலாம்.
வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை
படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம்.  




தட்சிணாமூர்த்தி   துதி

குருவே ஸர்வ  லோகானாம்

பிஷஜே பவ ரோகி ணாம்

நிதயே சர்வ வித்யானாம்

ஸ்ரீ தஷிணா மூர்த்தயே நம!


வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு
செய்யலாம்.
வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.
அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை
வணங்கி ஆசிபெறலாம்.
குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம்.
விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம்.
அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 முறை சுற்றி வலம் வரலாம்.

குரு ஸ்லோகம்-
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம






குரு பாடல்

குணமிகு வியாழ குருபகவானே

மனமுடன் வாழ  மகிழ்வுடன் அருள்வாய்!

பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா

கிரக தோஷமின்றி காத்தருள்வாயே