வியாழன், மே 12, 2011

பூண்டு- சமையல்

ரசம் இல்லாமல் தென்னிந்திய சமையல் ஒரு சமையலா?

ரசங்கள் ஒன்றா இரெண்டா? வித விதமாய் உண்டு.

 பூண்டு     ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு

சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.
       
பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற

நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.
       
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர்,

குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன

.பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்கு வகிக்கிறது.

வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்சேர்த்தால் நோய் நொடி

இல்லாமல் வாழலாம்

பூண்டு-  ரசம்

தேவையான பொருட்கள்

 பூண்டு---------------------------5 ----6பல்

தக்காளி------------------------- 2

மிளகு --------------------------1/2 ஸ்பூன்,

சீரகம்-------------------------------1/2 ஸ்பூன்,

 எண்ணைய்---------------------- 1 --- 2ஸ்பூன்,

கடுகு-------------------------------- 1/2 ஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி--------- கொஞ்சம்,

உப்பு ------------------------------தேவைக்கேற்ப.

மஞ்சள் தூள்---------------------------------- தேவைக்கேற்ப.

செய்முறை:

பூண்டு , மிளகு, சீரகத்தை முதலில் மிக்ஸியில்போட்டு பொடிக்கவும்.

பிறகு தக்காளியைச் சேர்த்து,சுற்றினால் நன்கு பேஸ்டாக வரும்.

அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்சேர்த்து சூடானதும்,

கடுகுதாளித்து,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன்

அரைத்து வைத்துள்ள தக்காளி, பூண்டு பேஸ்டைசேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒருகொதி வந்ததும் இறக்கி

கொத்தமல்லி தழைசேர்த்தால் ரசம் ரெடி.

இதை சூப்பாகவும் குடிக்கலாம்.



சுவையான இஞ்சி பூண்டு ஊறுகாய்


தேவையான பொருட்கள்


இஞ்சி – 100 கிராம்

பூண்டு – 100 கிராம்

மிளகாய் வற்றல் – 35

கடுகு – ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் – சிறிய கொட்டைபாக்கு அளவு

புளி – சிறிய எலுமிச்சை அளவு

கல் உப்பு – 1 1/2 தேக்கரண்டி

எண்ணெய் – 75 மில்லி


செய்முறை


இஞ்சியை தோல் சீவி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.

 புளியை சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் மிளகாய் வற்றலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து

வைத்துக் கொள்ளவும்.

அடுத்து பூண்டு மற்றும் இஞ்சியை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து

வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் வதக்கிய மிளகாய் வற்றல், பெருங்காய துண்டு போட்டு

அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் உப்பு, புளி மற்றும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி

அரைக்கவும்.

அதில் வதக்கி வைத்திருக்கும் இஞ்சி பூண்டை போட்டு விழுதாக அரைத்து

எடுத்துக் கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதில்

அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.

கைவிடாமல் 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கலவை நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும்.

காரம் அதிகமானால் இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்துக் கிளறி

கொள்ளவும்.

. இதை இட்லி, சாதம்,  தோசைக்கு கூட தொட்டுக் கொள்ளலாம்.

விருப்பப்பட்டால் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு கைப்படாமல்

பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

நன்றி- செட்டிநாடு சமையல்


தேவையான பொருட்கள்


பூண்டு  -  20 -30 பல்

சின்ன வெங்காயம்  – 20

தக்காளி  – 1

மல்லித்தூள்  – 2 தேக்கரண்டி

குழம்பு மிளகாய்த்தூள்  – 2  தேக்கரண்டி
\
மஞ்சள்தூள்  – 1 /2  தேக்கரண்டி

புளி  – நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய்  – 1  மேசைக்கரண்டி


தாளிக்க

கடுகு  – 1  தேக்கரண்டி

சோம்பு  – 1  தேக்கரண்டி

வெந்தயம்  -  1 /2  தேக்கரண்டி

கருவேப்பிலை  – சிறிது


செய்முறை

புளியை 3  கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள் , தேவையான அளவு உப்பு

சேர்த்து  கலந்து      கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக்

கொள்ளவும்.

 பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.

தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை

ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

 பின் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி

3  நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க

விடவும்

அல்லது குழம்பிலிருந்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.

பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது

மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை: