செவ்வாய், அக்டோபர் 19, 2010

எழில் மிகு சென்னை

அண்ணா நகர் கோபுரம்:
சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். அண்ணாநகர் ரவுன்டானா அருகே அமைந்துள்ள இதற்கு நுழைவு கட்டணம் ரூ.1; காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் 7 நாட்களும் இது திறந்திருக்கும்.
பிர்லா கோளரங்கம்:
இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் மய கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும். கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை 10-45; பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20; சிறியவர்களுக்கு ரூ.10.
கன்னிமாரா பொது நூலகம்:
தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இது காலை 9 மணி முதல் இரவு 07- 30 வரை திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் இது செயல்படாது. அனுமதி இலவசம்.
அரசு அருங்காட்சியகம்:
பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதான தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள் பெருவாரியாக உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன. அமராவதி பகதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன. இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.
எலியட்ஸ் கடற்கரை:
தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தன் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.
மெரினா கடற்கரை:
அழகான மெரினா கடற்கரையில் நடந்து கொண்டே வங்க கடலையும் அதில் மோதும் அலைகளையும் ரசிக்கலாம். இனிமையான கடற்காற்றை சுவாசிக்கலாம். உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இந்த கடற்கரைப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. மேலும் தமிழ் அறிஞர்கள், தியாகிகள் சிலைகள் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கடற்கரைச் சாலையில் சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் மாளிகை, அரசு கலைக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன.
நேப்பியர் பாலம்:
தலைமை செயலகத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் சாலையில் கூவம் நதி மீது அமைந்துள்ள நேப்பியர் பாலம் 1869ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பொறியியல் தொழில் நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
சென்னையின் பிரதான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள் உள்ளன.
கோட்டை அருங்காட்சியகம்:
தலைமை செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள கோட்டை அருங்காட்சியகம் முதலில் கோட்டை ராணுவ அதிகாரிகளின் உணவருந்தும் இடமாக இருந்தது. பின்னர் அது பாங்காக உருவெடுத்தது. தற்போதைய ஸ்டேட் பாங்கின் முன்னோடி இதுதான். 1796ல் இது கலங்கரை விளக்கமாவும் செயல்பட்டது. 1948 முதல் கோட்டை அருங்காட்சியகமாக இயங்கி வரும் இதில் சென்னை நகரை உருவாக்கியவர்களின் மூல கையெழுத்து பிரதிகள், பழங்கால காசுகள், வெள்ளிப் பொருட்கள், சீருடைகள் ஆகியவை உள்ளன.
ஐகோர்ட்:
சென்னை நகரின் மற்றொரு பிரதான கட்டிடமாக கருதப்படும் சென்னை ஐகோர்ட் கட்டிடம் 1892ல் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள கோர்ட் கட்டிடங்களில் இது இரண்டாவது பெரிய கட்டிடமாகும். சென்னை சட்டக் கல்லூரியும் இதன் வளாகத்தில் அமைந்துள்ளது
எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்:
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ஆற்காடு சாலையில் உள்ள இல்லம் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது..
டைடல் பார்க்:
வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையின் தாயகமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உறைவிடமான இங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் இங்கு உள்ளன.
சாந்தோம் பாசிலிகா:
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான் செயின்ட் தாமஸ் கல்லறை அமைந்துள்ள இடத்தில் சாந்தோம் பாசிலிகா உள்ளது. மெரினா கடற்கரையின் தெற்கு மூலையில் அமைந்துள்ள இதில் இந்த பகுதிக்கான கத்தோலிக்கர்களின் தலைமை மதகுருவான சென்னை ஆர்ச் பிஷப்பின் தேவாலயம் அமைந்துள்ளது.
விவேகானந்தர் இல்லம்:
ஐஸ் ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இடம் 1963 முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1842 முதல் 1874 வரை ஐஸ் கட்டிகளைச் சேமித்து வøக்கும் இடமாக இது விளங்கியது. தற்போது இதில் விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
கிண்டி தேசிய பூங்கா:
உலகிலேயே நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்காதான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும், பறவைகளும் உள்ளன.
அஷ்டலட்சுமி கோயில்:
எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்கள் விக்ரகங்களாக உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கபாலீஸ்வரர் கோயில்:
மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். சிவபெருமாøன் மயில் வடிவில் பார்வதி தேவி வழிபட்டதால் இந்த பகுதி மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் பதிகம் பாடி ஒரு சிறுவனை உயிர்ப்பித்ததாகவும் புராணம் கூறுகிறது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் அறுபத்து மூவர் திருவிழா குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

இதுவே வாழ்க்கை

4வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது.
6-அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி.
10-தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும்.மிட்டாய் தின்னதுக்காக என்னைஅடிச்சுட்டார்
12-நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது,என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு
14-அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பதுஎடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு
16-என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு.பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு.
18-எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்.
20-அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல.அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?
25-எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான்.இவரெல்லாம் ஒரு மனுஷனா?
30-என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு.என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?
40-என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட,கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா இருக்கேன்.
45-எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு.
50-ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு.ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும் கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா.அவர் கிரேட்.
55-ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்சஆளே இல்லை.
60-எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது.
(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).

புதன், அக்டோபர் 13, 2010

பால் போளி

தேவையான பொருட்கள்-
மைதா --------------------------------1 கப்
சர்க்கரை -----------------------------1 கப்
பால் -----------------------------------3 கப்
முந்திரி --------------------------------15
ஏலக்காய் -----------------------------6
குங்குமப்பூ----------------------------கொஞ்சம்
உப்பு ------------------------------------ஒரு சிட்டிகை
எண்ணை-------------------------------தேவையான அளவு
செய்முறை-
மைதாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ,தண்ணீர் ஊற்றி பிசையவும்.
அரை மணி நேரம் ஊற விடவும்.
முந்திரி, ஏலக்காயை பொடிக்கவும்.
பால் பாதி அளவு சுண்டும் வரை ,குறைந்த தணலில் வைத்துக் கொதிக்க விடவும். அதில் சர்க்கரை, சிறிது பாலில் கலந்த குங்குமப்பூ, முந்திரி,
ஏலப்பொடி போட்டு கலக்கி, 5 நிமி அடுப்பில் வைக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
மெல்லிய பூரிகளாக தேய்க்கவும்.
எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
பூரிகளை பாலில் 2 நிமிடம் ஊறவிட்டு தனியே எடுத்து வைக்கவும்.
பரிமாறும் போது பூரிகளின் மீது பால் ஊற்றி பரிமாறவும்.

வெள்ளி, அக்டோபர் 08, 2010

ரவை இனிப்பு

சுலபமாக செய்யும் இனிப்பு.
தேவையான பொருட்கள்-
ரவை .................................................200 கி
சர்க்கரை ..........................................200கி
தேங்காய்த் துருவல் ................ 50 கி
நெய் ...................................................50 கி
முந்திரி...............................................கொஞ்சம்
செய்முறை
கொஞ்சம் நெய்யில் துண்டாக்கிய முந்திரியை வறுத்து வைக்கவும்.
ரவையை சிவக்க வறுத்து வைக்கவும்.
தேங்காய்த் துருவலையும் சிவக்க வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி , கொதித்து ,பொங்கி வரும் போது துருவலை போட்டு கிளறவும்.
பிறகு கொஞ்சம், கொஞ்சமாக ரவையைப் போட்டு கிளறவும்.
அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கை விடாமல் கிளறவும்.
மீதி நெய்யையும் ஊற்றவும்.
பக்கங்களில் ஒட்டாமல் வரும் போது முந்திரியைப் போட்டுக் கிளறி ,ஒரு நெய் தடவிய தட்டில் ஊற்றி 5 நிமி ஆற விட்டு,வில்லைகளாகப் போடவும் .















திங்கள், ஆகஸ்ட் 16, 2010

சைவ புரோட்டின் காளான்

நாம் கிழங்கு வகைகளைப் பயன்படுத்தும் அளவுக்கு மற்ற காய்களை குறிப்பாக காளானை அதிகம் பயன்படுத்துவதில்லை. பலர் காளானை சைவ உணவாகக்ஏற்றுக் கொள்ளுவதிலை. இது அசைவ உணவாக கருதப் படுகிறது. ஆனால் நாம் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளை விட காளானில் நிறைய சத்துக்கள் உள்ளது. மிகுந்த அளவு புரதம் தரும் ஒரு சுவையான உணவு. சைவ உணவு உண்போருக்கு முழுமையான புரத உணவாக காளானை கூறலாம். புரத நோய்க் கோளாறுகளினால்உண்டாகும் பல பாதிப்புகளுக்கு காளான்கள் நல்ல மருந்தாகவும் பயன் படுகிறது.
காளானில் பல வகைகள் உள்ளது.ஆயிஸ்டர் மஸ்ரூம் எனப்படும் நத்தைக் காளானில், புரதமும் , 19 வகையான அமினோ அமிலங்களும் பலவிதமான
வைட்டமின்களும் உள்ளது. முட்டையில் உள்ள அதே அளவு சத்துக்கள் இதில் உள்ளது. மேலும் பட்டாணியில் உள்ள அளவு உயிர்ச் சத்துக்கள் நத்தைக் காளானில் உள்ளது.
சிப்பிக் காளானில் புரதம் 2.9% , மாவுச் சத்து 5.3 %, கொழுப்புச் சத்து 0.36% மற்றும் தாது உப்புக்கள்உள்ளது. இதில் கால்சியம் 71.௨%,பாஸ்பரஸ் 91.௨%, இரும்பு 8.8%,சோடியம் 10.௬%, பொட்டாசியம் 28.50% உள்ளது. பொதுவாக காளானில் போலிக் அமிலம் [folicacid] மற்றும் "பி"வைட்டமின் அதிக அளவிலும், வைட்டமின் "சி ",வைட்டமின் "டி" போன்றவையும் உள்ளது.
எல்லா வயதினரும், எல்லாப் பருவத்திலும் காளானை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மாவுச் சத்து குறைவாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், இதயக் கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களும் காளான் சாப்பிடலாம். தெளிவான ,கூர்மையான கண் பார்வை, உறுதியான பலம் பொருந்திய எலும்புகள் மற்றும் பற்களையும் பெற காளான்கள் உதவி செய்கின்றன. அதிக உடல் எடை கொண்டவர்கள் , கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளை முழுமையாகத் தவிர்த்து விட்டுத் தொடர்ந்து ஒரு மாதம் காளான் வகைகளை உணவில் சேர்த்து உண்டு வந்தால், பக்க விளைவுகள் இல்லாமல் , உடல் எடை நன்கு குறையும். முழுமையான சைவ உணவு இது என்றாலும் அசைவம் உண்போர் அந்த முறைப்படி சமைத்து உண்டால், அசைவ உணவின் சுவை இதிலேயே கிடைத்து விடும்.

புதன், ஆகஸ்ட் 11, 2010

சுடும் உண்மை


 பாபு ராஜேந்திரப் பிரசாத்


முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான

மதிப்புக்குரிய பாபு ராஜேந்திரப் பிரசாத்அவர்கள்,

தேர்தல் நேரத்தில்,ஓட்டு கேக்க பீகார் சென்றிருக்கிறார்.

ஒரு குடிசையில் இருந்த ஒரு ஏழைப் பெண்

ஒருவரிடம் ஓட்டுக் கேட்டு இருக்கிறார் .

அப்பெண்ணின் மகள் இருப்பதை அறிந்து

 அவளிடமும் ஓட்டு கேட்க விரும்பிஇருக்கிறார்.

அவரை காத்திருக்கச் சொல்லிவிட்டு

அப்பெண் வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.

 சில நிமிடங்கள் கழித்து மகள் வந்தாள்.

இருவரையும் ஒன்றாகப் பார்த்துப்

 பேச வேண்டும் என பாபு விரும்பினார்.

ஆனால் அது முடியவில்லை.

 சிந்தித்துப் பார்த்த பின்

அவருக்கு ஒரு உண்மை,

மனதை சுடும் ஒரு உண்மை புரிந்தது.


தாயுக்கும், மகளுக்கும் இருப்பது ஒரே புடவை.

வெள்ளி, பிப்ரவரி 19, 2010

தேர்வு ஜுரம்

தமிழ்நாட்டில் இந்த ஜுரம், விஷ ஜுரம் போல் வீட்டுக்கு வீடு பரவிக் கொண்டு இருக்கிறது. சிக்கன்குனியா,மட்டன்குனியா மாதிரி இது தேர்வு குனியா .இதற்கு பெற்றவர் மருந்து, அடுத்தவர் மருந்து, புத்தக மருந்து என பற்பல அறிவுரைகள் சொல்லப்படுகிறது.இதையெல்லாம் தாண்டி, கம்ப்யூட்டர் காலத்திற்கு தகுந்தபடி இந்த முறை T.Vயில் , தற்பொழுது அனைவராலும் அறியப்படும் சமையல் நிபுணர்
ஒருவர் தேர்வுக்கு முதல் நாள் சாப்பிட வேண்டிய உணவுகளில் துவங்கி தேர்வு அன்று சாப்பிடும் உணவு வரை கூறுகிறார்.ஆயிரம் நன்றிகள் அவருக்கு. இப்ப அதல்ல மேட்டர். இவைஎல்லாம் யாரைச் சென்று அடைகிறது? என்பதுதான்இன்றைய மேட்டர்.
CITY,TOWN மாணவர்களுக்கு, சந்தேகமே இல்லாமல், புத்தகங்களில், தொலைக்காட்சியில் வருவது எல்லாமே சுலபமாக, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அதை பின்பற்றினாலும், பின்பற்றாவிட்டாலும் அவர்கைளச் சென்று அடைந்து விடும். {ஆ....எவ்வளவு பெரிய வாக்கியம்; நன்றி என் தமிழ் ஆசிரியர்களுக்கு]
பெரிய பள்ளிகளில் அனுபவப்பட்ட ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் சத்தான [?]பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும் சத்தானவர்கள்தான். தேர்வு அன்றுதான் நல்ல உணவு சாப்பிடுவார்களா? தினம்தினம் சத்துத்தான்! ஊட்டம்தான்.
இதில் BEAUTY என்னன்னா தேர்வு உணவு ஸ்பெஷல் மெனு என்று சொல்லப்படுவதில் சீஸ்,ஜூஸ், சாலட்,பழங்கள்,முட்டை பிரட்,மீன், கோழி, காய்கறிகள் ....................என நீண்டு கொண்டே போகிறது.இந்த
நீண்ட பட்டியல் நீண்டு கொண்டே இந்தியாவின் உயிரைச் சென்று அடையுமா? என்பதுதான் இன்றைய மேட்டர். புரியலையா? இந்தியாவின் உயிர் எது? சத்தான உணவு சாப்பிடாமல் மஹா ஒல்லியான ஒரு கைத்தடி தாத்தா சொல்லியிருக்கிறார்? எனக்கே நான் என்ன சொல்லவந்தேன் என்று மறந்து விட்டது; மூக்கைச் சுற்றி தலையை தொட முயன்றால் .............?நேரா விசயத்திற்கு வரேன்.
கிராமங்களிலும் மாணவர்கள் படிக்கிறார்களே? அவர்களுக்கு இந்த
மெனுவை எப்படித் தெரியப்படுத்துவது?o.k.ஓரளவிற்கு புத்தகங்கள்,newspaper படிக்கிறார்கள்: T.V.யும் கலைஞர் அவர்களின் தயவால் எல்லா வீட்டிலும் இருக்கும்? அதனால் மெனுவை தெரிந்து கொள்ளுவதில் problem இல்லை. இதில் என்ன பிரச்சனை என்றால்

இவைஎல்லாம் என்னவென்று தெரியுமா?
விற்கும் பெரிய கடைகள் இருக்குதா ?
அம்மாக்களுக்குச் செய்யத் தெரியுமா?
மெய்னா வாங்க துட்டு இருக்கா துட்டு?
அதனால் இவர்களின் தேர்வு ஸ்பெஷல் மெனுவை,ஸ்பெஷலா யோசித்து கொடுக்க வேண்டும்.
அவர்களுக்குப் பழக்கமான உணவாக இருக்க வேண்டும்.
எளிதாக கிடைக்கக் கூடியதாகவும், அவர்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
அம்மாக்களுக்குப் புரியும்படியும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும்.
அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ற உணவாக இருப்பது மிக, மிக முக்கியம். [நம் நாட்டில் பெரிய அளவில் மாணாக்கர்கள் பல மைல் தூரம் நடந்தும்,சைக்களிலும், பஸ்சிலும் வருகிறார்கள்]
இதற்கு தகுந்த மாதிரிசமையல் நிபுணர்கள் செய்முறைகளை உண்டாக்கலாம்.
மதிய உணவில் இதை அரசாங்கமே கொண்டு வரலாம்.
ஆசிரியர்கள் "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு; இங்கு வந்து என் உயிரை எடுக்கிறாய்" என்றெல்லாம் அன்பாக பேசாமல் இருப்பதே பெரிய உதவி. அவர்கள் வீட்டு வேலைகளை செய்யச் சொல்லாமல் இருப்பது மிகப் பெரிய உதவி.
தேர்வு எழுத பயிற்சி தரலாம்.
பெற்றவர்களை கலந்து பேசலாம்.
இதில் பெற்றவர்களின் பங்களிப்பும் இருக்கிறது.
தேர்விற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும் சூழ்நிலையை உண்டாக்கித் தர வேண்டும். [காட்டு வேலைக்குப் போ, வீட்டு வேலை செய், மாடு மேய்க்கப் போ என்று சொல்லாமல் இருந்தாலே போதும்]
படிப்பதற்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.[சண்டைகளை மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்களும் நிம்மதியாக சண்டை போடலாம்.]
டி .வி. பொட்டி பார்ப்பதை குறைத்துக் கொள்ளலாம்.
"கழனி வேலை செய்யறவனுக்கு பாசானால் போதாதா? கடுதாசி படிக்கத் தெரிந்தால் போதும்" என்று பையனிடமும், "உன்னை இம்புட்டு நாள் இஸ்கூலுக்கு அனுப்பியதே அதிகம்: நாலெழுத்து படிச்சப் புட்டு கலெக்டரா ஆகப் போறே?சட்டி, பானை கழுவ இது போதும்"என்று பெண்ணிடமும்
இது போன்ற நம்பிக்கையைக் குறைக்கும் பேச்சைப் பேசாமல் இருப்பதே மிக,மிக, பெரிய உதவி.[ இதையெல்லாம் மீறி ஒருவர் படித்து,நல்ல நிலமையை அடைந்தால் அதை அனுபவிக்கப் போறவர்களும் பெத்தவங்கதான்.] .
ஆனா இப்ப நாட்டில் என்ன நடக்குதுன , இந்தியாவின் உசுருகள்தான் , உசுரை கையில் பிடுச்சுட்டு முதல் மார்க் எடுக்கிறார்கள். டவுன் மக்கா ,படிப்பில் கொஞ்சம் மக்காயிட்டு வர மாதிரி தெரியுது. ஆனா இவங்க பெத்தவங்க sorry டாடி, மம்மியைக் கேட்டால்" சிட்டி,டவுனில் டைவேர்சன் அதிகம்; ஊர்ப்புரம் [நான் புதிதாக தெரிந்து கொண்ட சொல்லை பயன்படுத்தி விட்டேன்] படிப்பைத் தவிர வேறு எந்த டைவேர்சனும் இல்லை"என்றுசொல்லுவார்கள் ; சொல்லுகிறார்கள்.{ அப்பாடி ! நான் தெரிஞ்சுகிட்ட ஒரு உண்மையையும் சொல்லிட்டேன். }
ஒ.கே. இப்ப நான் , டவுனுப்புரம், ஊர்ப்புரம் ,எல்லாப்புரத்து மாணவ, மாணவிகளுக்கு
தகுந்த மாதிரி எனக்குத் தெரிந்த, அனுபவத்தில் உணர்ந்த சில விஷியங்களை சொல்லப் போறேன்:
1. டெய்லி நடத்தற பாடங்களை அன்னனைக்கே படிக்கப் பாருங்கள். கொஞ்சம் சிரம்மம்தான்.அட்லீஸ்ட் ஒரு முறையாவது படித்துப் பாருங்கள்.
2 புரிந்து படிப்பது மிகவும் முக்கியம்.
3. ஆசிரியர் பாடம் நடத்தும் போது சொல்லும் குறிப்புக்களை குறித்து வையுங்கள்.[அதையும் தவறாமல் படிக்கணுங்கள்]
4. டெஸ்ட்+பள்ளித் தேர்வு எழுதறீங்களோ, இல்லையோ கொஸ்டீன் பேப்பரை வாங்கி வையுங்கள். பின்னால் உதவும்.[அட்டெம்ட் அடிக்கும் பின்னால் இல்லை]
5. பள்ளி +முந்திய ஐந்து வருடபொதுத் தேர்வு கொஸ்டீன் பேப்பரைப் ரிவைஸ் பண்ணுவது நல்ல பலனைத் தரும்.
6 . தேர்விற்கு அட்லீஸ்ட் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு பொதுத் தேர்விற்கு என்று முழு கவனத்துடன் படிக்க வேண்டும்.
7. எண்ணை குறைவான உணவுகள் [முடிந்தவரை அசைவ உணவுகளைதவிர்ப்பது ]சாப்பிடுவது நல்லது.
8. அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
9.இளநீர்,மோர் நிறைய குடிக்கலாம்.

10.இரவு நீண்ட நேரம் படிப்பதை விட அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.
11. இரவு படுக்க போகும் முன்னும், காலையில் எழுந்தவுடன் பத்து நிமிடங்களாவது
கண்களை மூடிக் கொண்டு "'நான்தான் முதல் மார்க் எடுப்பேன்" என்று உங்களுக்குள்ளேயே சொல்லுங்கள். [ கனவு காணுங்கள் என்று ஒருவர் சொன்னது நினைவிற்கு வருதா? இதுதான் அவர் சொன்ன கனவு]
12 .காலையில் எழுந்ததும் பச்சை மரத்தைப் பார்ப்பது கண்களுக்கு மிகவும் நல்லது.
13. அதிகாலை காற்றை நன்கு சுவாசிப்பது நல்லது.
இடைவிடாமல் படிப்பதும் போர்தான். கொஞ்ச நேரம் வேறு ஏதாவுது செய்யலாம். உடம்புக்கும்,
மனசுக்கும் , கண்ணுக்கும் ஓய்வு கட்டாயம் தர வேண்டும்.

வழக்கம்போல் அம்மா, குடும்பத்தார் அவங்க சக்திக்குத் தகுந்த மாதிரி பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது, குடம் தண்ணீர் ஊற்றுவது, மொட்டை அடிப்பது [யார் தலையை?] என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
மாணவமணிகள் அவங்க பங்குக்கு ஸ்பெஷல் வேண்டுதல்களை செய்துக்குங்கள்.
மேலே சொன்னதெல்லாம் ஒ.கே. நான் இப்போது ஒன்று சொல்லப் போறேன்; அதுதான் ........................
உறுதியான, நிச்சியமான,அனுபவத்தில் உணர்ந்த ஒரு உண்மை........!
இதில்தான் உங்களின் மகத்தான வெற்றியே இருக்கிறது!
பாசானாலே போதும்,

நல்ல மார்க் வேணும் ,
ரொம்ப நல்ல மார்க் வேணும்,
மாவட்டத்தில், மாநிலத்தில் முதலாவதாக வரணும்.
இதில் ஏதோ ஒன்றுதான் மாணாக்கர்களின் ஆசையாக இருக்கும்.

எனக்குத் தெரிந்து இதற்கு ஸ்பெஷலா ஒரு சாமி அல்லது தேவதை [அவங்கவங்க விருப்பபடி எப்படிவேணா சொல்லலாம்] இருப்பதாக கேள்விப் பட்டுயிருக்கிறேன். அது ..............................................?
"லக்"[LUCK]

"அதிர்ஷ்டம்"
இந்த சாமிக்கு,தேங்காய் உடைப்பீர்களோ, தண்ணி ஊற்றுவீர்களோ, மொட்டை அடிப்பீர்களோ தெரியாது: என்ன செய்வீர்களோ; இந்த சாமியின் அருள், இருந்தால் மட்டுமே மேலே சொன்னதுஎல்லாம் நடக்கும்.

ஆனா முயற்சி திருவினை ஆக்கும் என்றும் சொல்லி இருக்காங்கள்; [ஐயோ கொஸ்டீன் பேப்பர் போலவே இதுவும் கொழப்புது!] சரி எதோ ஒன்னு; பாஸ் ஆனால் போதும்.
ஆல் தி பெஸ்ட்.