வெள்ளி, ஜனவரி 17, 2014

குளுருக்கு கொள்ளு சமையல்

 கொள்ளு   என்பது ஒருவகை பயறு வகையாகும். 

இதனைத் தென் தமிழகத்தில் காணம், காணாம் பயறு  என்றும் கூறுவார்.

இது தட்டையாக, பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும். 


Sa-horsegram.jpg

புரதம் நிறைந்த ஒரு தானியம்.

 புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும்,

 இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. 

பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பது   சுப்பீரியர் புரதம். 

பருப்பு உணவு மூலம் கிடைப்பது இன்ஃபீரியர் புரதம். 

சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை.

 எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் 

மூலம் கிடைக்கிறஉயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் கொள்ளு.


ஆயுர் வேதத்தில்பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 
பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சனைக்கு,
 இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த  
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், 
சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், 
அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்  உதவுவதாக

ஆயுர்வேதம் சொல்கிறது.
சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட 
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப்  அருந்த வேண்டும்

என பரிந்துரைக்கப்படுகிறது. 
மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக உபயோகிக்கிறார்கள்.
கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்சனைகளுக்குத் தடவுகிறார்கள்.
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். 

உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். 

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், 

உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.

வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும்

 மிகவும் உகந்தது.

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், 

அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சொல்வர்.

கொள்ளு சூடானது என்பது உண்மைதான், 

அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். 

அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள 

அறிவுறுத்தப்படுகிறது. 

குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். 

குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. 

கொள்ளு கொடுப்பதால்தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது.

 உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. 

மனிதர்களுக்கும் அப்படித்தான்.

புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று

 சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு 

ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. 

அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கிறது. 

நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க 

வல்லது என்கிறார்கள்

அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் 

வல்லமையும் வாய்ந்தது.

ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை 

பெருமளவில் குறைக்கும்.  

கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும்

 உடனடியாக குறைக்க உதவும்.


இளைத்தவன் எள்ளு விதைப்பான்,
கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.
இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால்
 இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் 
எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்
,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று

முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

கொள்ளில் செய்யக்கூடிய சில சமையல் வகைகள் இதோ:
கொள்ளு சூப்:
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க:
நல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை: 
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க

வறுத்துக்கொள்ளவும்
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 
மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து
 நன்கு கரைத்து வைக்கவும்.
 வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
 கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து
 கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் 
தேவையான அளவு உப்பு சேர்த்து 
அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு மசியல்:
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 
4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும். 
வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,
மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து 
வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும். 
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு ரசம்:-
கொள்ளு----------  100கி 
தக்காளி -----------  2
பச்சை மிளகாய் ----- 2
வர மிளகாய் ---------  2
சாம்பார் பொடி -------- 1/2 டீஸ்பூன்  
மிளகு,சீரகம் பொடித்தது ----1/2 டீஸ்பூன்  
புளி ----------- ஒரு பெரிய நெல்லி அளவு 
மஞ்சள் தூள் --- 1 டீஸ்பூன்  
கடுகு ----   1/2 டீஸ்பூன்  
பெருங்காயத் தூள் ---- ஒரு சிட்டிகை 
நெய் -------- 1 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை, கொத்துமல்லி 
உப்பு --- தேவையான அளவ
செய்முறை:
கொள்ளுடன் மஞ்ச தூள் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.
புளியை கரைத்து [தேவையான அளவு] வடிகட்டி வைக்கவும்.
புளித்தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
அதனுடன் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய்,
 ஒடித்த வரமிளகாய், உப்பு, சாம்பார் பொடி,  பெருங்காயத் தூள் 
போட்டு கொதிக்க விடவும்.
வெந்த கொள்ளுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கடையவும்.
இதை கொதிக்கும் புளி நீரில் சேர்க்கவும்.  
ஒன்றாக சேர்ந்து கொதித்து நூரைத்து வரும் போது 
அடுப்பை அணைத்து, இறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை தளித்து சேர்க்கவும்,
மல்லித் தழை தூவவும்.
சளி, ஜலதோஷம் உள்ளபோது செய்ய வேண்டியது.
கொள்ளு ரசத்தை வேறு முறையிலும் செய்யலாம்.
கொள்ளு வேக வைத்த நீர் 2 கப் 
தேவையான அளவு புளித்தண்ணீர் 
தக்காளி ஒன்று 
பச்சை மிளகாய் அல்  வர மிளகாய் 2
ரசப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
தட்டிய பூண்டு 3 பல் 
ஒரு டீஸ்பூன் நெய் அல்  எண்ணையில்
 கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து,
கீறிய மிளகாய்,பூண்டு சேர்த்து புளித்தண்ணீர் சேர்க்கவும்.
கொதிக்கும் போது மஞ்சத் தூள், ரசப்பொடி  சேர்க்கவும்.
கொள்ளுத் தண்ணீர்,உப்பு சேர்க்கவும்.
நன்கு கொதித்ததும்  இறக்கி மல்லித் தழை போடவும்.
இதை சூப் போல் வேண்டும் என்றால் 
புளித்தண்ணீர், சேர்க்க வேண்டாம்.
தாளிப்புக்கு கட்டாயம் வெண்ணை போட வேண்டும்.
தட்டிய சின்ன வெங்காயம் 4-5 போடவும்.
2 கப் அளவிற்கு, 1/2 தக்காளியை நன்கு அடித்து 
வடிகட்டி சேர்க்கவும்.
பரிமாறும் போது  வடிகட்டி டம்பளரில் ஊற்றி 
மேலே கொஞ்சம் நெய் ஊற்றவும்.   
    

சனி, ஜனவரி 19, 2013

சுவாரசியமானவை,

Description: Description: Description: Description: cid:3.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 Courtallm Falls. Alas! Now you cannot view the same.
Only Shops, Shops & Shops!
 
Description: Description: Description: Description: cid:2.2986684418@web161404.mail.bf1.yahoo.com
The 1933 Nagarkovil  to Tirunelveli Bus 
Description: Description: Description: Description: cid:1.2986684418@web161404.mail.bf1.yahoo.com
Coimbatore Railway Station of the British Empire ! 

Description: Description: Description: Description: cid:4.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1932 Suchindram Temple : Sri Sthanumalayswami & a 22ft Anjaneyar 
Description: Description: Description: Description: cid:6.2986684418@web161404.mail.bf1.yahoo.com

                      1930 Anantha Padmsnabha Swamy Temple , Trivandrum 
Description: Description: Description: Description: cid:7.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 Rameswaram Temple Tower : Ramanathaswamy Temple 
Description: Description: Description: Description: cid:8.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 the Biggest, longest Rameswaram Temple Corridor 
Description: Description: Description: Description: cid:9.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 Thiruchengode Hills : Kodimada-chenkunroor Ardhanareeswarar 
  
Description: Description: Description: Description: cid:11.2986684418@web161404.mail.bf1.yahoo.com

                      Golden Lily Tank with the North Mottai Gopuram ,Madurai
Description: Description: Description: Description: cid:12.2986684418@web161404.mail.bf1.yahoo.com
The Kumbakonam Mahamakham Festival

Description: Description: Description: Description: cid:13.2986684418@web161404.mail.bf1.yahoo.com
The Kumbakonam Mahamakham Festival

                                
Description: Description: Description: Description: cid:14.2986684418@web161404.mail.bf1.yahoo.com
The Sri Nagarajar Temple Nagarcoil 
Description: Description: Description: Description: cid:16.2986684418@web161404.mail.bf1.yahoo.com

                                     The Raja Gopuram of Sri Rangam 

Description: Description: Description: Description: cid:18.2986684418@web161404.mail.bf1.yahoo.com
Sri Rangam 
Description: Description: Description: Description: cid:15.2986684418@web161404.mail.bf1.yahoo.com
 The Sri Ranganathaswamy Temple , Srirangam
 
Description: Description: Description: Description: cid:5.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1925 Kanyakumari the view with the Kumari Amman Temple 
Description: Description: Description: Description: cid:19.2986684418@web161404.mail.bf1.yahoo.com
  The Majestic Thiruvannamalai Temple : Sri Arunachaleswarar   Description: Description: Description: Description: cid:20.2986684418@web161404.mail.bf1.yahoo.com
Thiruvannamalai Temple Mandapam 
Description: Description: Description: Description: cid:21.2986684418@web161404.mail.bf1.yahoo.com
Trichy Teppakulam and the Fort 
Description: Description: Description: Description: cid:10.2986684418@web161404.mail.bf1.yahoo.com
1932 Bus   

shocking accident

This could be a common mistake in any household.  

This is shocking accident happened on 13th May 2012 in Pune.
A housewife died due to burns sustained in the kitchen. 


Her husband too was hospitalized for injuries 

due to burns while trying to rescue his wife.

How it happened?:-  

 The gas stove was on and cooking under process. 

Thelady observed some cockroaches near the sink and 

grabbed a can of insectkiller and sprayed it near the gas stove, 

which was on. 

There was anexplosion and in no time 

the poor woman was covered in flames, sustaining65% burns. 

Her husband rushed in, tried to douse the flames and

 his clothestoo caught fire. 

The husband is still in hospital, in the burns ward, still

unaware that his wife was declared dead on arrival.

Let us understand: -  


 All insect killer sprays such as "Hit", "Mortein"etc. 

have highly volatile and inflammable solvents.  

The atomized nanospray particles spread extremely rapidly and 

one spark is enough to ignite

this explosive mixture with oxygen present in air.

Did the poor lady realize the hazard involved? 

Apparently not!

Please educate your family & Friends about this and 


spread the word around....

வெந்தயத்தில் மருத்துவம்.


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும்

பொருட்களில் ஒன்று வெந்தயம்

உணவுக்குருசியைக் கொடுப்பதோடு

அதில் உள்ள பல்வேறுமருத்துவக் குணங்கள்

 நம்மை நோய்களில்இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு

சுத்தமான வெந்தயத்தை எடுத்து

200 மி.லிஅளவுதண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த 

பின்தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்

பின்வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்

தேவைப்பட்டால்கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற 

வெந்தயத் தண்ணீர்குடித்து வர

உடல் சூடுமலச்சிக்கல் என 

எந்தநோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிரஉடலை வனப்புடன் வைப்பதில்

வெந்தயத்தின் பங்கு அலாதியானது.  

ஒருதேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து

,வாணலியில் போட்டு வறுத்துஆற வைத்து, 

பின்மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள்

வெந்தயப்பொடியை ஆறிய பின் 

பாட்டிலில் போட்டுதேவைப்படும் போது 

தண்ணீரிலோ/மோரிலோகலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன்சிறிதளவு பெருங்காயத்தையும்

போட்டு வறுத்து பொடி செய்த பின் 

ஒரு டம்ளர்வெந்நீரிலோ அல்லது 

மோரிலோ போட்டு பருகி வர

வயிற்றுக் கோளாறுகள்அஜீரணம் போன்றவைஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 

தினமும் இந்தபொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால்

சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்

வெறும்வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து 

காபிபொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால்,

சர்க்கரை நோயாளிகளுக்கு 

சர்க்கரையின் அளவுகட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில்

வெந்தயம் –பெருங்காயப் பொடியை 

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 

முறை குடிக்க வயிற்றுப்போக்குகட்டுப்படுத்தப்படும்.


மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் 

மிகவும்அருமருந்தாகும்

சர்க்கரை நோய் இல்லாதவர்கள்

மூட்டு வலி ஏற்பட்டால்

வெந்தயப் பொடியை 

சிறியவெல்ல கட்டியுடன் கலந்து 

சிறு உருண்டையாக்கி

தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்

வெந்தயப்பொடியையும்பெருங்காயப் பொடியையும் 

சேர்க்க,சுவை கூடுவதுடன்

உடல் உபாதைகளையும்போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில்

வெந்தயம்சேர்த்து அரைத்து 

சிறிது நேரம் ஊறிய பின்தோசையாக ஊற்றி சாப்பிட்டால்

சுவைகூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை 

தினமும்காலையில் சாப்பிட்டால்

நீரிழிவுவயிற்றுப்புண்,வாய் துர்நாற்றம் 

உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க

வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்துசாப்பிடலாம்.


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் 

வெந்தயம்பயன்படுகிறது

பிரசவமான பெண்களுக்குகஞ்சியில் 

வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக்கொடுக்க பால் சுரக்கும்.

 இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுயில் 


பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
 

வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி

காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்துசாப்பிட்டு வர 

சர்க்கரை நோய் குறையும்.

 
வெந்தயம் 20 கிராம் + 350 கிராம்பச்சரிசியுடன் சேர்த்து 

சமைச்சு சாப்பிட இரத்தம்ஊறும்.

 
கஞ்சியில் வெந்தயத்தை  சேர்த்துக் 

காய்ச்சிக்க காய்ச்சி குடித்தால் தாய்ப்  பால் சுரக்கும்.

 
வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவத்து 

நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க 

முடிஉதிராம நல்லா வளரும்.

 5 
கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் 

கடைந்து கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால்பெருகும்.

வெந்தயம்கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து

கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.

 
வெந்தயம்கடுகுபெருங்காயம்கறிமஞ்சள் 

சமமாக எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி

சாப்பாட்டில் கலந்து சாப்பிட 

வயிற்றுவலி,பொருமல்ஈரல்  வீக்கம் குறையும்.

 
வெந்தயம்வாதுமைப் பருப்புகசகசாஉடைத்தகோதுமை

நெய்பால்சர்க்கரை சேர்த்து சாப்பிட

உடல் வன்மையாகவும்வலுவாகவும் இருக்கும்.

இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை  சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்துக் 

கட்டிகளுக்குப் பத்துபோட்டால் 

கட்டி உடையும்.படைகளுக்கும் பூசலாம்.

 
வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல 

பூச எரிச்சல் குறையும்.